Academy Awards 2020 Updates : சர்வதேச அளவில் உயரிய விருதாகக் கருதப்படும் 92-வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு, அதிக ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் ’ஜோக்கர்’. இந்தப் படம் 11 பரிந்துரைகளைக் கொண்டிருக்கிறது. ஜோக்கரைத் தொடர்ந்து ’1917’, ’தி ஐரிஷ்மேன்’, ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ ஆகியப் படங்கள் தலா 10 பரிந்துரைகளைக் கொண்டிருக்கின்றன. ’ஃபோர்டு வி ஃபெராரி’, ’தி ஐரிஷ்மேன்’, ’ஜோக்கர்’, ’1917’, ’மேரேஜ் ஸ்டோரி’, ’லிட்டில் வுமன்’, ’பாரஸைட்’, ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ மற்றும் ’ஜோஜோ ராபிட்’ ஆகிய 9 படங்கள் சிறந்த படத்திற்கான டைட்டிலை தட்டிச் செல்ல போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
‘என் வாழ்க்கையிலும் ’96’ காதல்’: தியேட்டர் வாசலில் கதறி அழுத ரசிகர் வீடியோ
சாம் மென்டிஸ் (1917), போங் ஜூன்-ஹோ (பாரஸைட்), குவென்டின் டரான்டினோ (ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்டில்), டோட் பிலிப்ஸ் (ஜோக்கர்) மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸ் (தி ஐரிஷ்மேன்) ஆகியோர் சிறந்த இயக்குனர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்ற தென்கொரியாவின் பாராசைட் படம் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. இதன் மூலம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது தென்கொரியாவின் பாராசைட் படம்
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ’ஜுடி’ படத்திற்காக நடிகை ரெனீ ஸெல்வெஜர் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றார் ஜோக்கர் பட நாயகன் ஜாக்கீன் பீனிக்ஸ். அதோடு சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் இப்படம் பெற்றுள்ளது.
‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தில் நடித்ததற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நாளை அவர் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ’லிட்டில் வுமன்’ திரைப்படத்தின் ஜாக்குலின் டுர்ரான் பெற்றுள்ளார்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளிலும் பாரஸைட் திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை பெற்றது ஜோஜோ ராபிட் படம்
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது கொரியன் படமான பாராசைட் படம்
சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ‘டாய் ஸ்டோரி 4’ தட்டிச் சென்றது.
சிறந்த துணை கதாபாத்திரத்திற்கான ஆஸ்கர் விருதை பிராட் பிட் பெற்றார். இவர் தயாரிப்பில் வெளியான ‘12 இயர்ஸ் ஆஃப் எ ஸ்லேவ்’ என்ற திரைப்படம் 2014-ம் ஆண்டு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றிருந்தது.