தல அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. தல எந்த ஊரு தமிழ் பேசியிருக்காரு தெரியுமா?
2007 ம் ஆண்டு நடிகர் அஜித் டபுள் ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் நடித்த படம் பில்லா. அதன் பிறகு, மீண்டும் இரட்டை வேடத்தில் அவர் நடித்து வரும் படம் தான் விஸ்வாசம். இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் இரட்டை வேடத்தில் வரும் இரண்டு அஜித்களில் அப்பா அஜித்துக்கு ஜோடியாக காலா ஈஸ்வரி மற்றும் இளைய அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் நிலை இருப்பதால் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படும் என்ற பேச்சும் எழுந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான டப்பிங் வேலை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பொங்கல் வசூல் ரஜினிக்கா அஜித்துக்கா?
விஸ் வாசம் படத்தில் தந்தை அஜித் மதுரை தமிழ் பேசுகிறார். இதற்கான டப்பிங் வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தல அஜித் மதுரை தமிழ் பேசும் பெரும்பாலான பகுதிகள் டப்பிங் முடிந்தாகிவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
The second look of @ViswasamOffl will be released by @SathyaJyothi_ tomorrow (25.10.18) @ 10.30am @directorsiva @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @DoneChannel1#Viswasam #ViswasamThiruvizha
— Suresh Chandra (@SureshChandraa) 24 October 2018
மேலும் நாளை (25.10.2018) இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Actor ajith speaks this region tamil in viswasam