scorecardresearch

அருண் விஜய் பட அப்டேட்.. விக்ரம் ரசிகருக்கு பதில் அளித்த இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த பிறகு அருண் விஜய் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அருண் விஜய் பட அப்டேட்.. விக்ரம் ரசிகருக்கு பதில் அளித்த இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘யானை’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே மாதம் 6-ந்தேதி யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை நடிகர் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த பிறகு அருண் விஜய் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விக்ரம் ரசிகரின் ட்வீட்டுக்கு பதில் அளித்த இயக்குநர்

‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘கோப்ரா’.

ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். 

கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

 2019-ம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. 

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், ‘எல்லா படமும் வெளியாகி வருகிறது. கோப்ரா படம் எப்போது வெளியாகும்’ என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தை வருகிற மே 26-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி வருகிற மே மாதம் 26-ந்தேதி கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் நடிக்க சாயிஷா திட்டம்

ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதனைத் தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’, ‘டெடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவரது நடனம் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டன.இதில் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. காதல் கைகூடி திருமணத்தில் முடிந்தது. சமீபத்தில் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்றதற்கு பிறகு மீண்டும் நடிப்பதில் சாயிஷா ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கதைகளையும் ஆர்வமாக கேட்டு வருகிறார்.

‘கஜினிகாந்த்’, ‘டெடி’ படங்களைத் தொடர்ந்து ஆர்யா-சாயிஷா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா

ஏழாம் அறிவு, பூஜை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் மகள்.

இவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.

திரையுலகப் பிரபலங்கள் பலருக்கும் இந்த 3-ஆவது அலையில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘அனைவருக்கும் வணக்கம். ஒரு விரைவான மகிழ்ச்சியற்ற அப்டேட். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் குணமடைந்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷாருக் கான் படத்தில் பணிபுரியும் அனுபவம்

பகிர்ந்த தீபிகா படுகோன்</strong>

சமீபத்தில் அமேஸான் தளத்தில் வெளியான கெஹ்ரையான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்.

இவர் பாலிவுட்டில் அறிமுகமானது முன்னணி நடிகர் ஷாருக் கான் உடன் தான். அந்தப் படத்தின் பெயர் ஓம் சாந்தி ஓம். அந்தப் படம் 2007-ஆம் ஆண்டு வெளியானது.

அதன் பிறகு ஷாருக் கான் உடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தார்.

தற்போது மீண்டும் அவருடன் இணைந்து பதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பதான் படத்தில் நடித்து வருகிறேன். ஷூட்டிங் தளத்தில் பாதுகாப்பாக உணர்கிறேன் என்று கூறினார்.

பாக்யராஜை வீழ்த்திய செல்வமணி: மீண்டும் இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு தேர்வு

ஷாருக் கானுடன் தீபிகா ஜோடி சேர்ந்துள்ள படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor arun vijya movie update more cinema stories418069

Best of Express