நடிகர் ஆர்யாவும் பிரபல நடிகை ஒருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக கடந்த சில ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்தார். அவர் மீது ஒருதலையாகக் காதல் பித்து கொண்ட பெண் ரசிகைகளுக்கு கல்யாணம் ஆகி அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால் இன்னமும் ஆர்யா தன்னை ஒரு சாக்லேட் பாயாகவே நினைத்து சுற்றி வந்துகொண்டிருந்தார்.
இதற்கிடையில் ஆர்யாவின் சாக்லேட்பாய் இமேஜைப் பயன்படுத்தி அவருக்குப் பெண் பார்ப்பது போல ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பெண்களை அழைத்துவந்து சுயம்வரம் போல நிகழ்ச்சி ஒன்றை நடத்தி டி.ஆர். பி. –யை ஏற்றிக்கொள்ளப் பார்த்தது. 3 பெண்களை இறுதி மேடை வரை அழைத்து வந்து கடைசியில் ஏதோ ஏதோ பேசி எஸ்கேப் ஆனார் ஆர்யா.
ஆர்யாவின் இந்த செயலை விமர்சிக்காதவர்களே இல்லை. இதுபுறம் என்றால், ஆர்யாவின் பெஸ்ட் ஃப்ரண்டான நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் கல்யாணம் என்றெல்லாம் சபதம் எடுத்திருந்தார். சங்க பணிகள் என்ன ஆனது என தெரியவில்லை ஆனால் அவருக்கு கல்யாணம் என்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவலை விஷாவின் அப்பாவே உறுதி செய்தார்.
ப்ரண்ட் கமிட்டாகிவிட்டார். அப்ப ஆர்யாவோட நிலைமை? என கலாய்த்தவர்களுக்கு அடுத்த செய்தி. நடிகர் ஆர்யாவுக்கு விரைவில் திருமணம் என தகவல்கள் வெளிவரத் தொடங்கி விட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/01/vidyapati.jpg)
இது மாதிரியான தகவல்கள் பலமுறை வெளிவந்துள்ளது. ஆனால் இம்முறை கொஞ்சம் சீரியஸாகவே பார்க்கப்படுகிறது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த சாயிஷா சாகல்க்கும் ஆர்யாவுக்கும் இடையில் நட்பு உருவாகி அது இப்போது காதலாக மலர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் சொல்லி விட்டதாகவும் விரைவில் இவர்கள் இருவரின் திருமண செய்தி வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. சாயிஷா வீட்டில் ஒருவராகவே ஆர்யா மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தெரியுமா? நடிகர் விஷால் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார்
இந்த தகவலுக்கு வழக்கம் போல் ஆர்யா சிரித்துக் கொண்டே கடந்து சென்றிருக்கிறார். எனவே இம்முறையாவது ஆர்யா திருமணம் நடைபெறுமா? என்பது தான் கோலிவுட் பிரபலங்களில் சீரியஸ் பேச்சு.