Advertisment

சேர்ந்து வாழ விரும்பினேன்; பிரிவுக்கு காரணம் ரச்சிதாவின் தோழி: தினேஷ் ஷாக் வாக்குமூலம்

நடந்த அனைத்திற்கும் பின்புலமாக பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்; ரச்சிதா குற்றச்சாட்டுகளை மறுக்கும் தினேஷ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rachitha Mahalakshmi

நடந்த அனைத்திற்கும் பின்புலமாக பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார்; ரச்சிதா குற்றச்சாட்டுகளை மறுக்கும் தினேஷ்

ஆபாச மிரட்டல், அதிரடி புகார் என பரபரப்ப ஏற்படுத்துன சீரியல் தம்பதியோட விவாகரத்து விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பிரிவுக்கான காரணம் குறித்து நடிகர் தினேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்: 48 வயதில் ப்ரக்னன்சி; இப்பதான் மெச்சூரிட்டி வந்திருக்கு: நடிகை ஷர்மிளி

கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழும் இவர்களின், பிரிவுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா தனது கணவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அதேநேரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா பங்கேற்றதற்கு டிவி பேட்டிகளில் தினேஷ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நடிகை ரச்சிதா, சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்தார். இதில் தான் கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த சில தினங்களாக தினேஷ் தனது செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். மேலு்ம் தன்னை செல்போனில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில், ரச்சிதாவின் புகார் குறித்து விளக்கம் அளித்த நடிகர் தினேஷ், ஆபாச மிரட்டல்கள் அனைத்தும் பொய். பிரச்சனைகளை எப்படியாவது பேசி தீர்க்க, கடந்த இரண்டு வருடங்களாக ரச்சிதாவுக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பி சமாதானம் பேச முயற்சி செய்தேன். ஆனால் அதை எல்லாம் ரச்சிதா காதில் போட்டுக்கொள்ளவில்லை. நடந்த அத்தனைக்கும் ரச்சிதாவின் தோழியான டப்பிங் ஆர்டிஸ்ட் தான் காரணம். நேரில் பார்த்து சமாதானம் பேச அழைத்ததை அப்படியே மாற்றி, அவர்கள் இருவரும் இணைந்து ஆபாச மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளனர். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என காவலர்கள் விசாரித்து விட்டு அனுப்பி விட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும், கணவன் தனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என்று ரச்சிதா கூறுவதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தினேஷ், நடந்த அனைத்திற்கும் பின்புலமாக பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு ரச்சிதாவுக்கு கிடைத்த சில புதிய நட்பால் அவர் தவறான பாதையில் செல்கிறார். அவர்களின் தூண்டுதலாலேயே ரச்சிதா இப்படி நடந்து கொள்கிறார். அந்த நடிகையின் அண்ணன் தான் ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்த போது கூடவே இருந்தார். ரச்சிதாவுக்கு விருப்பம் இருந்தால் விவாகரத்து கொடுத்து விலகிவிடுகிறேன் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Rachitha Mahalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment