மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்… மகிழ்ச்சி அளித்ததா திடீர் திருப்பம்?

தமிழ்த் திரையுலகில் பலரின் நீண்ட நாள் கற்பனையாக இருப்பது பொன்னியின் செல்வன். இதனை தற்போது சாதித்துக் காட்டுவேன் என மணிரத்தினம் இறங்கியுள்ளார். தமிழக வரலாற்றினை, சோழர்களின் வரலாற்றை, இயற்கை கொஞ்சும் தமிழ் மொழியில் மக்கள் அனைவரையும் அறிய வைத்த புதினம் தான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். கதைகளும், கதாப்பாத்திரங்களும் படித்தவர்கள் மனதில் இன்றும் கம்பீரமாய் நிற்பதற்கு காரணம் என்றால் அது பொன்னியின் செல்வானான அருள் மொழி வர்மன் தான். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி? […]

maniratnam ponniyin selvan, பொன்னியின் செல்வன்
maniratnam ponniyin selvan, பொன்னியின் செல்வன்

தமிழ்த் திரையுலகில் பலரின் நீண்ட நாள் கற்பனையாக இருப்பது பொன்னியின் செல்வன். இதனை தற்போது சாதித்துக் காட்டுவேன் என மணிரத்தினம் இறங்கியுள்ளார்.

தமிழக வரலாற்றினை, சோழர்களின் வரலாற்றை, இயற்கை கொஞ்சும் தமிழ் மொழியில் மக்கள் அனைவரையும் அறிய வைத்த புதினம் தான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். கதைகளும், கதாப்பாத்திரங்களும் படித்தவர்கள் மனதில் இன்றும் கம்பீரமாய் நிற்பதற்கு காரணம் என்றால் அது பொன்னியின் செல்வானான அருள் மொழி வர்மன் தான்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி?

இப்படிப்பட்ட மாபெரும் படைப்பை எப்படியாவது படமாக எடுக்க வேண்டும் என்ற முதற்கட்ட முடிவிலேயே பலரும் துவண்டுவிட்டனர். ஏனெனில், அதில் இருக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை தத்ரூபமாக கொண்டு வருவது சாத்தியமான விஷயம் இல்லை. எனவே பலரும் இதைப்பற்றி யோசிப்பதுடன் நிறுத்திக் கொண்டனர்.

ஆனால், இந்த நூலை, நிச்சயம் படமாக உருவாக்குவேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார் மணிரத்தினம். இதற்காக முயற்சிகளிலும் தற்போது களமிறங்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் திடீரென விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மணிரத்னம் கைவண்ணத்தில் பொன்னியின் செல்வனாக நடிக்கிறாரா சியான் விக்ரம்?

இந்நிலையில் தான், ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன், காஷ்மோரா ஆகிய படங்களில் நடித்த கார்த்தியை விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் மாமனார் அமிதாப் – மருமகள் ஐஸ்வர்யா களமிறங்குகிறார்களா?

மாபெரும் பிரம்மாண்ட உருவாக்கத்தில்,விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor karthi to be part of mani ratnam ponniyin selvan

Next Story
நாஞ்சில் சம்பத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? கலங்கிய ஆர்.ஜே. பாலாஜிNanjil Sampath, நாஞ்சில் சம்பத்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com