எம்.ஆர்.ராதா கொள்ளுப் பேரனை மணந்த பார்த்திபன் மகள்!

எம்.ஆர். ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் நரேஷ் கார்த்திக்

நடிகர் பார்த்திபன், நடிகை சீதாவின் மூத்த மகள் அபிநயாவுக்கும், தொழில் அதிபர் நரேஷ் கார்த்திக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், நடிகை சீதாவின் இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் கொள்ளுப் பேரன் நரேஷ்க்கும் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Parthiepan daughter abhinaya marriage: பார்த்திபன் மகள் அபிநயா திருமணம்

R. Parthiepan daughter Abhinaya Marriage

எம்.ஆர். ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் தான் நரேஷ் கார்த்திக். இவர் தொழில் அதிபராக உள்ளார்.

மேலும் படிக்க – நயன்தாரா சர்ச்சை: ஏன் இப்படி பேசினார் ராதாரவி?

நரேஷ் – அபிநயா திருமணத்திற்கு, லதா ரஜினிகாந்த், பாக்யராஜ், நடிகர் கார்த்தி, ராதாரவி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் திரண்டு வந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close