scorecardresearch

சிம்பு வீட்டில் டும் டும் டும்… அண்ணனை முந்தும் தம்பி… காரணம் இது தான்

நடிகர் சிம்பு வீட்டில் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். அதாவது அவரின் தம்பி குறளரசன் காதல் திருமணம் செய்ய இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக இருந்த டி. ராஜேந்தருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் தான் நடிகர் சிம்பு. இளைய மகனான குறளரசனுக்கு தான் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறளரசன் திருமணம் முதல் மகன் சிம்பு இன்னும் சிங்கிளாகவே […]

Kuralarasan, குறளரசன்
Kuralarasan, குறளரசன்
நடிகர் சிம்பு வீட்டில் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம். அதாவது அவரின் தம்பி குறளரசன் காதல் திருமணம் செய்ய இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக இருந்த டி. ராஜேந்தருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் தான் நடிகர் சிம்பு. இளைய மகனான குறளரசனுக்கு தான் திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறளரசன் திருமணம்

முதல் மகன் சிம்பு இன்னும் சிங்கிளாகவே இருக்கும் நிலையில், அவரின் தம்பி காதல் திருமணம் செய்ய இருக்கிறார். வரும் ஏப்ரல் 26-ம் தேதி உறவினர்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதம் மாறிய சிம்புவின் தம்பி… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்?

சமீபத்தில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதற்கான உண்மைக்காரணம் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் என்றும், கூடிய விரைவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டும் வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor simbu brother kuralarasan to get married soon