scorecardresearch

ஷிவாங்கி மாதிரியே பேசி கிண்டலடித்த சிவகார்த்திகேயன்; ‘டான்’ பட விழாவில் கலகல…

டான் பட ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் குக் வித் கோமாளி ஷிவாங்கி மாதிரி பேசிய சிவகார்த்திகேயன்; அரங்கில் சிரிப்பலை

ஷிவாங்கி மாதிரியே பேசி கிண்டலடித்த சிவகார்த்திகேயன்; ‘டான்’ பட விழாவில் கலகல…

Actor SivaKarthikeyan trolls Shivangi in Don movie trailer release: டான் பட ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் குக் வித் கோமாளி ஷிவாங்கி மாதிரியே பேசி சிவகார்த்திகேயன் கிண்டல் அடித்தது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரகனி, சூரி, எஸ்.ஜே.சூர்யா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. இந்தநிலையில், இன்று படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஷிவாங்கி, நான் நடிகையாக மாற சிவகார்த்திகேயன் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் படக்குழுவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், ஷிவாங்கி குறித்து பேசும் போது அவரை மாதிரியே பேசி மேடையை கலகலப்பாக்கினார். சிவகார்த்திகேயன் பேசும்போது, ஷிவாங்கி எப்படினு உங்க எல்லாருக்கும் தெரியும், அவங்க கேமராவுக்கு முன்னாடி ஒரு மாதிரி நடிப்பாங்க, பின்னாடி ஒரு மாதிரி இருப்பாங்கனு கிடையாது, எல்லா டைமும் ஒரே மாதிரி தான். லபலபனு எதாவது பேசிட்டே இருப்பாங்க. நாங்க கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணோம் என்று சொன்னவர், உடனே ஷிவாங்கி குரலில் அண்ணே… அண்ணே… என்னண்ணே… அப்படி சொல்லிட்டு இருப்பாங்க என கலாய்த்தார்.

இதையும் படியுங்கள்: நயன்- விக்கி கல்யாணமா? திருப்பதியில் தேதி குறிச்சாச்சு!

சிவகார்த்தியன் ஷிவாங்கி மாதிரியே மிமிக்ரி செய்ததும் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. ஷிவாங்கியும் விழுந்து விழுந்து சிரித்தார். மேலும் பேசிய சிவகார்த்திகேயன், எப்பவும் ட்வுட் கேட்டுகிட்டே இருப்பாங்க, அவங்க வந்தாலே நான் கொஞ்சம் திரும்பிக்குவேன். ஆனாலும் அவங்ககிட்ட தப்பிக்க முடியாது. ஆனால் வெரி ஸ்வீட். ஆரம்பத்தில் பயத்திலே நடிச்சவங்க, இந்த படத்தில் ஒரு அழகான ரோல் பண்ணிருக்காங்க என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ஷிவாங்கி மாதிரியே பேசியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actor sivakarthikeyan trolls shivangi in don movie trailer release

Best of Express