பொதுவாக ஒரு பாணியில் எடுக்கப்படும் படம் வெற்றியை தொட்டுவிட்டால், அதே பாணியில் குறைந்தது 3 படங்களாவது தயாரிக்கப்படுவது வழக்கம். அதே டெக்னிக்கை தற்போது சின்னத்திரையும் பின்பற்றி வருகிறது.
அந்த வகையில் நாகினி என்ற பாம்பு சீரியல் ஒன்று பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து சன் டிவி நந்தினி என்ற பாம்பு சீரியலை ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியலின் தயாரிப்பாளர் நடிகை குஷ்பு தான். இந்த சீரியலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்யா ராம் அனைவரின் ஃபேவரைட்டும் கூட.
நந்தினி சீரியல் செட்டில் நடிகர் சூர்யா :
பொதுவாகவே ஒரு சீரியல் நன்றாக ஓடினால், அதில் கெஸ்ட் அப்பியர்ஸ் என்று பிரபல நடிகர் மற்றும் நடிகைகளை உள்ளே இழுப்பதை பாலிவுட் சீரியல்கள் ஒரு டிரெண்டாகவே கொண்டுள்ளது.
அந்த டிரெண்டு இப்போது தமிழ் சின்னத்திரைக்கும் தொற்றிக்கொண்டதோ என்னவோ, நந்தினி சீரியல் செட்டில் சூர்யா வந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நந்தினி சீரியல் நடிகர்களோடு அவர் எடுத்துகொண்ட ஃபோட்டோ வைரலாகி வருகிறது.
ஆனால் உண்மையில் சூர்யா அவர்களை சாதாரணமாக பார்க்க தான் சென்றாரா அல்லது சீரியலில் எதாவது கெஸ்ட் ரோலா என்பது தெரியவில்லை. காத்திருந்தே பார்க்க வேண்டும்.