நடிகர் சூர்யா, சிங்கம், சிங்கம்-2, காப்பான், ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் உச்சத்தில் இருப்பவர்.
பசங்க, பசங்க-2, மெரினா உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் மார்ச் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளனர்.
டாக்டர் படத்தில் அறிமுகமான பிரியங்கா அருள் மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் வெளியானது.
படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்திய பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: இதுதான் சந்தியாவின் கனவா..? ஷாக்கான சரவணன்… அடுத்து என்ன?
டிரைலர் நல்லா இருக்கு நல்ல அழுத்தமான கதைன்னு நினைக்கிறேன் என்று ஒரு ரசிகரும், சிங்கம் அடுத்த லெவலுக்கு போயிடிச்சுன்னும் மற்றொரு ரிசகரும் கமென்ட் பதிவு செய்துள்ளனர்.
டிரைலர் சிறப்பாக உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“