Advertisment
Presenting Partner
Desktop GIF

விஜய் வருமான வரி மோசடி செய்யவில்லை: ஐடி அதிகாரிகள் தகவல்

Bigil Movie Collections : பிகில் படத்திற்கு ரூ. 50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ. 80 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளார் - ஐ.டி. நிறுவனம் அறிவிப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay, thank you neyveli, vijay thanks to fans, விஜய், நெய்வேலிக்கு நன்றி தெரிவித்த விஜய், மாஸ்டர் படப்பிடிப்பு, நெய்வேலியில் விஜய், vijay thanks to neyveli fans at shooting spot, master movie shooting at nlc, nlc mine,

vijay, விஜய், Vijay IT Raid,

Income Tax Department Raid at Actor Vijay House :  கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி, நடிகர் விஜய், பிகில் படத் தயாரிப்பாளர், பிகில் பட பைனான்சியர், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.

Advertisment

விஜய் வீட்டில் ஏன் இந்த  சோதனை?

தீபாவளிக்கு இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது விஜயின் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்று வெற்றி அடைந்தது. இந்தியா அளவில் அதிக வசூலைக் குவித்த படம் இதுவென்று தகவல் வெளியானது.  ஏ.ஜி.எஸ். நிறுவனம் வருமானவரித்துறையிடம் தாக்கல் ச்செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சமர்பித்த அறிக்கைக்கும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் சமர்பித்த அறிக்கைக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்த காரணத்தால் அவரின் பனையூர் மற்றும் சாலிகிராம வீடுகள், அலுவலகங்கள் ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

நடிகர் விஜய்யின் அசையா சொத்துகள் குறித்த விவரமும், படத்திற்காக அவர் வாங்கப்பட்ட சம்பளம் குறித்து சோதனை நடைபெற்றதாக வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக தெரிவித்தது. மேலும், விஜய் வீட்டில் இருந்து எந்த கருப்பு பணமும், ஆவணமும் கண்டறியப்படவில்லை என்றும கூறப்பட்டிருந்தது.

விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி ரெய்டா : இன்று நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில், மீண்டும் வருமான வரித் துரையினர் தென்பட்டனர். பிப்ரவரி மாத சோதனையின் தொடர்ச்சியா? (அ) வேறு புதிய வருமான வரி சோதனையா? நடிகர் விஜய் எங்கு உள்ளார்?  மாஸ்டர் இசை வெளியிட்டு விழா நிலை என்ன? போன்ற கேள்விகள் சமூக ஊடங்களில் பதிவாகி வந்தது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் விஜய்!

இந்நிலையில், நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் தென்பட்டது உண்மை தான். ஆனால், சோதனைக்காக இல்லை என்று தெரிய வந்துள்ளது.கடந்த, பிப்ரவரி மாதம் 5ம் தேதி விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் போது சில அறைகள் மற்றும் லாக்கர்களுக்கு சீல் வைக்கப் பட்டதாகவும், அதை அகற்றும் பணிக்காகவே தற்போது வருமான அதிகாரிகள் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாத வருமான வரி சோதனையில், பைனான்சியருக்கு தொடர்புடைய கணக்கில் காட்டப்படாத அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள், நோட்டுகள், செக் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெறும் இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத தொகை ரூ.300 கோடியை  தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.டி. அதிகாரிகளின் அறிவிப்பு

சோதனையில் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு அதில் விஜய் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று அதிகாரிகள் நேற்று (12/03/2020) உறுதி செய்தனர். பிகில் படத்திற்கு ரூ. 50 கோடியும், மாஸ்டர் படத்திற்கு ரூ. 80 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளார் விஜய் என்றும், அதற்கு முறையாக வரியை செலுத்தியுள்ளார் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment