Advertisment

விஜய் படங்களை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்... மாஸ்டர் முழுப் படமும் ‘லீக்’ ஆனது

Tamilrockers: ட்விட்டர், டெலகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தங்கள் புதிய முகவரிகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை இழுக்கின்றன.

author-image
WebDesk
Jan 12, 2021 22:15 IST
விஜய் படங்களை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்... மாஸ்டர் முழுப் படமும் ‘லீக்’ ஆனது

Master Movie vs Tamilrockers: சினிமா உலகை வேட்டை ஆடுவதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றன பைரசி வெப்சைட்டுகள். அவற்றில் ஒன்று, தமிழ் ராக்கர்ஸ். மாஸ்டருக்கு முன்பு பல படங்களை ரிலீஸான சில மணி நேரங்களில் ஆன்லைனில் வெளியிட்டு வந்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். மாஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில பைரசி வெப்சைட்கள் புதன்கிழமை மதியம் ஆன்லைனில் வெளியிட்டன.

Advertisment

குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு ரசிகர்களைத் தாண்டியும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இவர்களின் படங்களையே அசுர வேகத்தில் லீக் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது தமிழ் ராக்கர்ஸ். ரஜினிகாந்தின் கபாலி, காலா, தர்பார் என எந்தப் படமும் இதற்கு தப்பவில்லை. அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களையும் தமிழ்ராக்கர்ஸ் வேட்டையாடித் தீர்த்தது.

Master Movie vs Tamilrockers download threat: மாஸ்டருக்கு சவால்

2018 தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்க்கார் படத்தை, ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது. அதேபோல 2019 தீபாவளிக்கு ரிலீஸான பிகில் படத்தையும் சில மணி நேரம் கூட தாமதிக்காமல் உடனே ரிலீஸ் செய்தது தமிழ் ராக்கர்ஸ்.

மாஸ்டர் முழுப் படத்தையும் ‘லீக்’ செய்த பைரசி வெப்சைட்கள்

இத்தனைக்கும் அப்போது ஓடிடி தளத்தில் படங்கள் வெளியாகவில்லை. இந்த கொரோனா காலகட்டத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று போன்ற படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவது தமிழ் ராக்கர்ஸுக்கு இன்னும் சுலபமானது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாதது, தமிழ் ராக்கர்ஸுக்கு பின்னடைவே!

ஆனால் தமிழ் ராக்கர்ஸின் கடந்த கால சரித்திரம், வெள்ளித் திரையில் வெளியாகும் படங்களையும்கூட உடனுக்குடன் தனது ஆன்லைனில் வெளியிட்டு வந்ததுதான். இதைத் தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பலன்கள் கிடைக்கவில்லை. மாஸ்டர் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட உயர் நீதிமன்றம் தடை செய்திருக்கிறது.

ஆனால் தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் இதைப் பற்றி கவலையே படாமல், ட்விட்டர், டெலகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தங்கள் புதிய முகவரிகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை இழுக்கின்றன. மாஸ்டருக்கும் இது பெரிய சவால்.

Latest: மாஸ்டர் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில பைரசி வெப்சைட்கள் புதன்கிழமை மதியம் ஆன்லைனில் வெளியிட்டன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

#Actor Vijay #Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment