மாஸ்டர் முழுப் படத்தையும் ‘லீக்’ செய்த பைரசி வெப்சைட்கள்

Master Full Movie In Tamilrockers: அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு, அதிகாரிகளுக்கும் டிமிக்கி கொடுக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

vijay, vijay master movie, master movie special screening for production team, மாஸ்டர், விஜய், மாஸ்டர் பொங்கலுக்கு ரிலீஸ், மாஸ்டர் திரைப்படம், master movie release on pongal festival, master movie new update, master new update

Master Full Movie leaked to Download in Tamilrockers: நடிகர் விஜய்யின் மாஸ்டர் முழுப் படத்தையும் லீக் செய்து அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸ் இதுபோல புதுப் படங்களை ரிலீஸ் செய்வது புதிதல்ல என்றாலும், கொரோனா தொற்றுக்கு பிறகு வெள்ளித்திரையில் வெளியாகிய பெரிய படமான மாஸ்டரின் கலெக்‌ஷனை இது பாதிக்குமோ? என்கிற அச்சம் இருக்கிறது. வேறு சில பைரஸி இணையதளங்களிலும் மாஸ்டர் வெளியானது.

விஜய் படங்களை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்…

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் புதன்கிழமை (ஜன.13) ரிலீஸ் ஆனது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வெள்ளித் திரையில் வெளியான பெரிய படம் இது. எனவே இதன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Master Full Movie In Tamilrockers: மாஸ்டர் ‘லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்

படம் ரிலீஸுக்கு 2 நாட்களுக்கு முன்பே சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகின. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை பகிர வேண்டாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் வைத்தார். படத்தை தியேட்டரில் பார்க்கும்படி அவரும், இதர பல சினிமா நட்சத்திரங்களும் வேண்டுகோள் வைத்தனர்.

ஆன்லைனில் ‘மாஸ்டர்’ லீக்… கூகுளில் இதுதான் ட்ரெண்ட்!

இந்நிலையில் மாஸ்டர் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டது. இது படக் குழுவினரை அதிர வைத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெள்ளித் திரையில் வெளியான படம் மாஸ்டர். எனவே இதன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை சினிமா உலகமே உற்று நோக்குகிறது. அதில் பாதிப்பு ஏற்படுமோ? என்பதே படக் குழுவின் கலக்கம்.

விஜய்யா? விஜய் சேதுபதியா? ரெய்டு விடும் மாஸ்டர் – விமர்சனம்

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க சினிமா உலகம் எடுத்த முயற்சிகள் எதுவும் இதுவரை கைகூடாமலேயே இருக்கிறது. அடிக்கடி தனது இணையதள முகவரியை மாற்றிக் கொண்டு, அதிகாரிகளுக்கும் டிமிக்கி கொடுக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Master full movie leaked to download in tamilrockers actor vijay

Next Story
“உங்களுக்காகத்தான் வந்தேன் ப்ரோ” – ஆரிக்கு ஆறுதல் கூறிய சனம்Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Aari Velmurugan Samyuktha Bala
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com