Download Master Movie Trending In Google: மாஸ்டர் திரைப்படம் திங்கட்கிழமையே ‘லீக்’ ஆனதாக சர்ச்சை கிளம்பியது. இது கூகுளில் ‘டவுன்லோடு மாஸ்டர் மூவி’ என ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு சென்றது. நெட்டிசன்கள் மில்லியன் கணக்கில் மாஸ்டர் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய அலைமோதினர். வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆனபிறகே இப்படியொரு அலைமோதல் இருக்கும். இதற்கிடையே மாஸ்டர் படம் புதன்கிழமை மதியத்திற்கு முன்பே முழுமையாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில பைரசி வெப்சைட்களில் வெளியானது.
Advertisment
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வந்திருக்கிறது. ஜனவரி 13-ம் தேதிதான் இந்தப் படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 11-ம் தேதியே படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆகின. இது படக் குழுவினரை அதிர வைத்தது.
Master Movie vs Tamilrockers: மாஸ்டர் ‘லீக்’ சர்ச்சை
Advertisment
Advertisement
இதற்கிடையே 12-ம் தேதி முழுப் படமும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி வெப்சைட்களில் லீக் ஆனதாக தகவல்கள் பரப்பப்பட்டன. டெலகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக படத்தின் லிங்க் பகிரப் படுவதாகவும் கூறப்பட்டன. படத்தின் சில காட்சிகள் லீக் ஆனதையே சமூக ஊடகத்தில் சிலர் திரித்துவிட்டதாக தெரிய வந்தது.
லீக் ஆன காட்சிகளை ரசிகர்கள் பகிர வேண்டாம் என மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் வேண்டுகோள் வைத்தனர். இதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும், அதற்கு அப்பால் பலரும் இணையதளத்தை இதற்காகவே முற்றுகையிடுவது தெரிகிறது.
கூகுள் சேர்ச்சில் திங்கட் கிழமை, ‘டவுன்லோடு மாஸ்டர் மூவி’ என்பது ட்ரெண்ட் ஆனது. வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆனதும்தான் இப்படி அந்தப் படத்தை பைரசி வெப்சைட்களில் பார்க்க ஒரு கூட்டம், கூகுளில் தேடுதல் வேட்டையை நடத்தும். ஆனால் மாஸ்டர் படம் ரிலீஸுக்கு முன்பே பைரசி ஆர்வலர்களின் தேடுதலுக்கு இலக்காகி இருக்கிறது.
சில காட்சிகளோ, முழுப் படமோ எதுவாக இருந்தாலும் பைரசி வெப்சைட்களில் பார்ப்பது ஏற்புடையது அல்ல. இதை மக்கள் எப்போது உணர்வார்கள்?
Latest: இதற்கிடையே மாஸ்டர் படம் புதன்கிழமை மதியத்திற்கு முன்பே முழுமையாக தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில பைரசி வெப்சைட்களில் வெளியானது. டெலகிராம் உள்ளிட்ட சில சமூக ஊடகங்களில் இந்த பைரசி வெப்சைட்களின் லிங்க்கள் பகிரப்பட்டன. இந்த லிங்க்களுக்கான இணையத்தில் முட்டி மோதிய பார்வையாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"