‘உம்னு, கம்னு, ஜம்னு’ விஜய் பேசிய அந்த பன்ச் டயலாக் தல ஃபேன் எழுதியதாம்... யாரு பாருங்க!!!

சர்கார் படத்தின் பாடல் வெளியீடு விழாவில் நேற்று நடந்தது. அதில் நடிகர் விஜய் பேசிய பன்ச் டயலாக் யாருடையது என்று வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய், தயாரிப்பாளர் நிறுவனம் சன் பிக்சர்ஸ் மற்றும் தலைமை கலாநிதி மாறன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Read More: எடப்பாடியிடம் பணிந்தது நினைவு இல்லையா? எங்கிருந்து வந்தது இந்த தைரியம் விஜய்?

நடிகர் விஜய் பேசிய பன்ச் டயலாக் :

விழாவில் பங்கேற்ற அனைவரும் மேடையில் சர்கார் படம் மற்றும் படக்குழுவினர் குறித்தும் பேசினர். இறுதியாக பேசிய விஜய், அவரது உரையாடலில் ஹேட்டர்ஸ்களுக்கு வழக்கம்போல் ஒரு மெசேஜ் கூறினார். அதில்,

“இது யாரு சொன்ன வரிகள் எனக்கு தெரியல, ஆனால் இதை நான் ஃபாலோ பண்ணுறேன். உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா நம்ம லைப் ஜம்முனு இருக்குமா” என்று கூறினார்.

அவரின் இந்த வார்த்தைகளுக்கு அரங்கமே அதிர்ந்தது. ரசிகர்கள் விசில் பறக்க, சில நொடிகள் அரங்கமே மெர்சல் அடைந்தது. அப்படிப்பட்ட வரிகள் கயல்விழி என்ற பெண் எழுதியது தான். அதனை கயல்விழியே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் விஜயின் இந்த பேச்சு வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்ததோடு, அதனை தாம் தான் எழுதியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் டுவிஸ்ட் என்னவென்றால் இந்த கயல்விழி தீவிர அஜித் ரசிகை. அவ்வாறு இருக்க தளபதி இந்த வசனத்தை பேசியது தனக்கு கர்வமாக இருக்கு என்றும், அஜித் ரசிகர்கள் விஜயை காப்பி அடித்துவிட்டதாக போடும் டுவீட்டுகளையும் ரீடுவீட் செய்து வருகிறார்.

எது எப்படியோ, விஜய்க்கே தெரியாமல், அவர் கூறிய அந்த ஒற்றை வரி ஒருவரை ஓவர்நைட்டில் ஒபாமா ஆக்கிவிட்டது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close