/tamil-ie/media/media_files/uploads/2020/03/ETxUg46VAAAwG83.jpg)
actor Vijay's Master Andha kanna paathaakkaa lyrical video is out
மாஸ்டர் திரைப்படத்தின் வாத்திகம்மிங், குட்டி ஸ்டோரி பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இன்று காலை 11 மணி அளவில் வெளியாகியுள்ளது ”அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலில் லிரிக்கல் வீடியோ. அந்த வீடியோ, இதோ உங்களுக்காக. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
மேலும் படிக்க : விஜயின் வாத்தி கமிங் பாடல்; ஷாந்தனுவின் மாஸ் கிகி டான்ஸ் சவால்; வைரல் வீடியோ
சமீபத்தில் விஜயின் தனிப்பட்ட வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதிலும் அரசியல் பேசி அதனை மிகவும் ஜாலியான மனநிலையில் ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் விஜய். இந்த பாடலை பார்த்துவிட்டு எப்படி இருக்கின்றது என உங்களின் கருத்துகளை எங்களுக்கு தெரிவியுங்கள் வாசகர்களே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.