அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சேனலாக தொடங்கப்பட்ட நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கியதை சாடி நடிகர் விஷால் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, பழனிசாமி-பன்னீர்செல்வம் ஒரு குழுவாகவும் டிடிவி தினகரன் ஒரு குழுவாகவும் பிரிந்தது. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலாக இருந்த ஜெயா டிவி, தற்போது அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வசம் உள்ளது.
நியூஸ் ஜெ தொலைக்காட்சி சேனல் குறித்து நடிகர் விஷால் கருத்து
இதன் காரணமாக அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சேனலாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய சேனலை தொடங்கிய அதிமுக கட்சியை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
நியூஸ் ஜெ சேனல் தொடக்கம்... முக்கிய கட்டளையுடன் தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
அந்த பதிவில், “மற்றுமொரு செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மாதச் சம்பளம் வாங்கும் எம்எல்ஏ, எம்பிக்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பைத் தொடங்க முடிகிறது? 2019ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
November 2018
சர்கார் படத்தில் வந்த இலவச பொருட்கள் காட்சிக்கு அதிமுகவினர் தெரிவித்த எதிர்ப்பு சர்ச்சை இப்போது தான் ஓய்ந்துள்ளது. அதற்குள் சும்மா இருக்கும் அதிமுகவை சொரிந்துவிடுகிறார் விஷால்.