இணையத்தில் வேகமாக பரவிய வதந்தி... கோபத்தில் நடிகர் விஷ்ணு விஷால்

நடிகை அமலா பாலை நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்று வேகமாக பரவிய செய்தியை கண்டித்து அவர் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவியும் தனியே பிரிந்து வாழ்ந்த வந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து நடந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நடிகர் விஷ்ணு விஷால் கண்டனம்

இதனை தொடர்ந்து இன்று இணையத்தளம் முழுவதும், விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவியது. இந்த தகவலுக்கு விஷ்ணு விஷால் தனது கண்டனத்தை காட்டமாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

ராட்சசன் படம் நடிகர் வாழ்க்கையில் சோகம்… இப்படி ஆயிருச்சே

அதில், “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதுவும் எழுதாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இணைந்து நடித்தவர்கள் அமலா பால் மற்றும் விஷ்ணு விஷால். இவர்கள் ஜோடியாக நடித்த இந்த திரைப்படம் மக்களிடயே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சமீபத்தில் வெற்றி நிகழ்ச்சியயும் இப்படக் குழுவினர் நடத்தினர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close