புது சீரியலில் ஆல்யா மானசா… அப்போ விஜய் டி.வி இல்லையா?

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ராஜா ராணி 2 சீரியலில், நடித்துக் கொண்டிருந்தபோது ஆல்யா மானசா கர்ப்பமானார்.

புது சீரியலில் ஆல்யா மானசா… அப்போ விஜய் டி.வி இல்லையா?

பிரசவம் காரணமாக விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஆல்யா மானசா தற்போது சன்டிவியின் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் ராஜா ராணி முதல் சீசன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. அதற்கு முன்னதாக கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய இவர், ராஜா ராணி தொடரில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு முதலில் பெண் குழந்தை பிறந்த நிலையில், சஞ்சீவ் சன்டிவியின் கயல் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதற்கு முன்பே ஆல்யா விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க தொடங்கிவிட்டார். சித்து நாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் ஐ.பி.எஸ் கனவுடன் வாழும்  ஒரு பெண்ணின் போராட்டத்தை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: திரையில் ஸ்டார்… தரையில் சாதாரண மனிதன்… விஜய் சேதுபதியை நினைத்து நெகிழும் சீனு ராமசாமி!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில், நடித்துக்கொண்டிருந்தபோது ஆல்யா மானசா கர்ப்பமானார். ஆனாலும் தொடர்ந்து நடித்து வந்த அவர் பிரசவ நேரத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக நடிகை ரியா அந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.

இதனிடையே சீரியலில் இருந்து விலகிய ஆல்யாவுக்கு அடுத்த சில நாட்களில் ஆண்குழந்தை பிறந்தது. அப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்த அவரிடம், ராஜா ராணி சீரியலில் ரீ-என்ட்ரி எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிள நிலையில், மீண்டும் ராஜா ராணி சீரியலுக்கு வர வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். மேலும் யூடியூப் சேனலில் ஆக்டீவாக இருந்த அவர், பியூட்டி டிப்ஸ் தொடர்பான வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே பிரசவம் மட்டுமே ராஜா ராணி சீரியலில் இருந்து விலக காரணம் இல்லை என்று கூறப்படும் நிலையில், தற்போது ஆல்யா சன்.டிவி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த அவரது கணவர் சஞ்சீவ் தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நடித்து வரும் தற்போது ஆல்யாவும் சன்டிவி சீரியலில என்ட்ரி ஆக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress alya manasa entry in sun tv new serial udate in tamil

Exit mobile version