அனிருத் முதல் கிசுகிசு நட்பு வரை – சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா… இன்றைய தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகைகளில் ஒருவர். தேர்வு செய்யும் கதாபாத்திரம், அதில் வெளிப்படுத்தும் உடல்மொழி, பேசும் வசனங்கள், அதில் காதை மூடிக் கொள்ளும் அளவுக்கான காட்டமான வார்த்தைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு துணிச்சல் என்று சொல்கிறோம். இயற்கையில் பாடகியான ஆண்ட்ரியா நடிப்பிலும் பெரும் ஆர்வம் உள்ளவர். தமிழையே ஆங்கிலம் போல உச்சரித்து இவர் பாடும் பாடல்களுக்கும், பேசும் வசனங்களுக்கும் என தனி ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல் அதேசமயம், […]

actress andrea jeremiah special photo gallery - அனிருத் முதல் திருமணமான நபருடன் இருந்த உறவு வரை - சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா
actress andrea jeremiah special photo gallery – அனிருத் முதல் திருமணமான நபருடன் இருந்த உறவு வரை – சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா… இன்றைய தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகைகளில் ஒருவர். தேர்வு செய்யும் கதாபாத்திரம், அதில் வெளிப்படுத்தும் உடல்மொழி, பேசும் வசனங்கள், அதில் காதை மூடிக் கொள்ளும் அளவுக்கான காட்டமான வார்த்தைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு துணிச்சல் என்று சொல்கிறோம்.

இயற்கையில் பாடகியான ஆண்ட்ரியா நடிப்பிலும் பெரும் ஆர்வம் உள்ளவர். தமிழையே ஆங்கிலம் போல உச்சரித்து இவர் பாடும் பாடல்களுக்கும், பேசும் வசனங்களுக்கும் என தனி ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர்.

ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்

அதேசமயம், சர்ச்சைகளுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் தமிழில் பெஸ்ட் என்ட்ரி கொடுத்து அசத்திக் கொண்டிருந்த அனிருத்துக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

அனிருத் பெயரும் சற்று டேமேஜ் ஆக, ஆண்ட்ரியாவும் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத இருவரும் அடுத்தடுத்து தங்கள் வேளைகளில் பிஸியானார்கள். இன்று இருவரும் வெவ்வேறு உயரத்தில் உள்ளனர். குறிப்பாக, அனிருத் இசையில் ராக் ஸ்டாராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆண்ட்ரியா, நடிப்பு, பாடல், டப்பிங் என்று படு பிஸியாக தனது பாதையை வகுத்துக் கொண்டார்.

ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை ஆகிய படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தியேட்டர் ஆப்ரேட்டரே ஆடிப் போகும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளை வசனங்களாக பேசி அசரடித்த ஆண்ட்ரியா, வட சென்னையில் தன் கணவனை கொன்றவனை பழிவாங்க, யாரைக் கொல்ல வேண்டுமோ மனதில் கொலை வெறியுடன் அவருக்கே மனைவியாக வாழ்ந்து காலி பண்ணும் கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார்.

சமீபத்தில் இவரைச் சுற்றிய சர்ச்சை, ஒரு பிரபலம் தன்னை நம்ப வைத்து சீரழித்ததாக ஆண்ட்ரியா கூறியது பற்றி தான்.

‘சில நாட்களுக்கு முன்பு நான் திருமணம் ஆன நபரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன்’ என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருந்தார். இது தமிழ் சினிமா துறையினர் மத்தியில் பெரும் சர்ச்சையானது. அதாவது, நடிகை ஆண்ட்ரியா ’ப்ரோக்கன் விங்க்’ என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீடு சமீபத்தில் பெங்களூரில் நடந்தது. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன். அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார். அதோடு, அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் “broken wings” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு பிறகு நான் அப்படி சொல்லவே இல்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பட்… எதற்கும் கவலைப்படாமல் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார் ஆண்ட்ரியா. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் ஆண்ட்ரியா எவ்வளவு சர்ச்சைகள் எழுந்தாலும் அதை முறியடித்து வெற்றி நாயகியாக வலம் வர வாழ்த்துகள்.

ஹோம்லி, கவர்ச்சி இரண்டிலும் ஹாட் – பாப்ரி கோஷ் ஸ்பெஷல் புகைப்படங்கள்

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress andrea jeremiah special photo gallery

Next Story
ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்வீடியோ povoma oorgolam, povoma oorgolam song video, chinna thambi povoma oorgolam mp3, போவோமா ஊர்கோலம் பாடல் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com