scorecardresearch

நினைவாற்றல் குறைவால் அவதிப்படுகிறேன் – நடிகை பானுப்பிரியா வேதனை; ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது வசனங்களை கூட மறந்துவிட்டேன். ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதைக் கூட மறந்துவிடுகிறேன் – நடிகை பானுப்பிரியா தவிப்பு

நினைவாற்றல் குறைவால் அவதிப்படுகிறேன் – நடிகை பானுப்பிரியா வேதனை; ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை பானுப்பிரியா

80, 90களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை பானுப்பிரியா, தற்போது நினைவாற்றல் குறைப்பாட்டால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் 1980-கள் முதல் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். பானுப்பிரியா கடைசியாக தமிழில் கடைக்குட்டி சிங்கம், சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: விஜய் விருப்பமே இல்லாமல் நடித்த 2 படம்… ரெண்டுமே பெரிய ஹிட்..!

நடிகை பானுபிரியா கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அபிநயா என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உடல்நிலை குறித்து பானுப்பிரியா அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய அவர், சமீப காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. நினைவாற்றலை இழந்துவிட்டேன். கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்துவிட்டேன். பின்னர் நடனத்தில் ஆர்வம் குறைந்தது. நான் வீட்டில் நடனம் கூட பயிற்சி செய்யவில்லை.

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது வசனங்களை கூட மறந்துவிட்டேன். ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதைக் கூட மறந்துவிடுகிறேன். கடந்த 2 வருடமாக இப்படித்தான் இருக்கிறது, என்று பேசினார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது.

அதேநேரம் பானுப்பிரியா மருத்துவர்கள் அறிவுரையின்படி இதற்காக மருந்துகளை எடுத்து வருகிறார். கணவரை பிரிந்ததாக வெளியான செய்தியும் தவறு என்று பானுப்பிரியா கூறினார். மேலும், தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பினேன். 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என்றும் பானுப்பிரியா கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress bhanupriya talks about her memory loss problems fans shocks

Best of Express