scorecardresearch

மாரியை காப்பாற்ற வரும் முத்துப் பேச்சி: ஜீ தமிழ் சீரியலில் தேவயானி மாஸ் என்ட்ரி

ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் மாரி சீரியல் வரும் மே 1 ஆம் தேதியான திங்கள் முதல் இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை என 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகிறது; முத்துப்பேச்சி கதாப்பாத்திரத்தில் களமிறங்குகிறார் தேவயானி

Actress Devayanis daughter 12th class marks are out
நடிகை தேவயானி

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரைம் டைம் சீரியலான மாரி சீரியலில் நடிகை தேவயானி என்ட்ரியாகிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியல் அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. மேலும், பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறுகிறது. சமீபத்தில், மாரி சீரியல் 200 எபிசோட்களை நிறைவு செய்தது.

இதையும் படியுங்கள்: இந்த விஷயத்தில் பார்த்திபன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்: மாஜி கணவர் நினைவுகளை பேசும் சீதா

இதனால், மற்ற பிரைம்-டைம் டிவி சீரியல்களை விட டி.ஆர்.பி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மாரி சீரியல் வரும் மே 1 ஆம் தேதியான திங்கள் முதல் இரவு 8 மணி முதல் 8.45 மணி வரை என 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகிறது.

இந்தநிலையில் ரசிகர்களுக்கு மேலும், இன்ப அதிர்ச்சியாக, சீரியலில் மற்றொரு முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. முக்கிய கதாப்பாத்திரமான முத்துப்பேச்சி கேரக்டரில் நடிகை தேவயானி களமிறங்குகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவரும், பல்வேறு சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகளின் மனதை வென்றவருமான தேவயானி இந்த சீரியலில் களமிறங்குவது, ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

மாரி சீரியலில் நடிப்பது தேவயானி பேசுகையில், “மாரி போன்ற அற்புதமான சீரியலில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆஷிகா படுகோன், சோனா ஹெய்டன், ஆதர்ஷ் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடிக்க ஆவலாக உள்ளேன். இயக்குனர் வி.சதாசிவம் மற்றும் ரத்தினம் வாசுதேவன் சார் ஆகியோருக்கு இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. நிச்சயமாக, நான் சீரியலில் எனது சிறந்த பங்களிப்பைக் கொடுப்பேன் மற்றும் தொடர்ந்து ஆதரவளிப்பேன்,” என்று கூறியுள்ளார்.

இந்த சீரியலில் தற்போது மாரி மாடத்தி அம்மனுக்கு கோவில் கட்ட முயற்சி செய்து வர ஜாஸ்மின் டீம் அதனை தடுக்க போராடி வருகிறது. இதில், மாரி வரும் நாட்களில் தனது சொந்த ஊருக்கு வர ஜாஸ்மின் அவளை ஊரிலேயே வைத்து கொல்ல முயற்சி செய்வதாகவும், ஜாஸ்மினின் இந்த முயற்சியை முறியடித்து மாரியை காப்பாற்றும் முத்துப்பேச்சி கதாபாத்திரத்தில் தான் தேவயானி நடிக்க உள்ளாராம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress devayani enters zee tamil maari serial as muthuppechi