ஜோதிகா நடிக்கும் மகளின் மட்டும் முதல் போஸ்டர் வெளியீடு:
திருமணத்திற்கு பிறகு வெகு நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார். அதற்கு அடுத்து இவர் நடித்த ‘மகளிர் மட்டும்’ படமும் பெரிய அளவிலான வெற்றியை தழுவியது. தற்போது ‘செக்க சிவந்த வானம்’ மற்றும் ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மகளிர் மட்டும் படத்தில் வரும் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் பற்றிய செய்திக்கு:
திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே பெண்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக கொண்டதாகும். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும்
‘காற்றின் மொழி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் மற்றும் ஜோதிகா கணவரான சூர்யா வெளியிட்டார்.
When every day shoot is exciting and special…!! The film becomes immortal!! Can’t wait to watch Jo in this rollercoaster fun ride!! Dir #Radhamohan #Jyotika @vidaarth_actor @Dhananjayang @imkaashif #KaatrinMozhi #HappyIndependenceDay #KaatrinMozhiFirstLook Good luck! ???? pic.twitter.com/CIFORaR2uy
— Suriya Sivakumar (@Suriya_offl) 15 August 2018
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள இந்த போஸ்டரை பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த போஸ்டரில் ஜோதிகா இரண்டு கல்வெட்டுகளை தாங்கி நிற்கிறார். அதில் பெண்களுக்கான 10 கட்டளைகள் எழுதப்பட்டுள்ளது. அவை:
- உன் விருப்பம்போல் உடை உடுத்துவாயாக
- பசித்தால் நீயே முதலில் சாப்பிடுவாயாக
- உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், மறுகன்னத்தை காட்டாதிருப்பாயாக
- நீ விரும்பியபடி செய்வாயாக
- குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக
- வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்கச் செய்வாயாக
- நீ சம்பாதித்து உன் விருப்பம்போல் செலவு செய்வாயாக
- நீ விரும்பாத போது, வற்புறுத்தலுக்குச் சம்மதியாமல் இருப்பாயாக
- மனதில் பட்டதை சொல்வாயாக
- ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அறிவாயாக