Advertisment

'என்ன ஈஸ்வரி இதெல்லாம்? ஆதி குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும்?'

ஒருவேளை ஆதி குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? நடிகை கனிகாவின் வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்ட்

author-image
WebDesk
New Update
kaniha and adi

நடிகை கனிகா மற்றும் எதிர் நீச்சல் சீரியல் ஆதிகுணசேகரன் கதாப்பாத்திரம்

நடிகை கனிகா நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், இணையவாசிகள் அவரின் சீரியல் கதாப்பாத்திரத்தோடு ஒப்பிட்டு ஜாலியாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. அதைத் தொடர்ந்து சேரனின் இயக்கத்தில் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்திலும், நடிகர் அஜித்துடன் இணைந்து ‘வரலாறு’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் கனிகா. நடிப்பைத் தவிர டப்பிங்கிலும் நடிகை கனிகா கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: குத்தாட்டம் போட்டபடி வந்து தாலி கட்டிய மாப்பிள்ளை: ’எரும சாணி’ விஜய்- நக்ஷத்திரா திருமண கலாட்டா

publive-image

திரைத்துறை மட்டுமல்லாது சீரியலும் நடிகை கனிகா நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் கனிகா நடித்து வருகிறார். இதில் ஆதிகுணசேகரன் எனும் கதாபாத்திரத்திற்கு மனைவியாக ஈஸ்வரி எனும் கேரக்டரில் கனிகா நடித்து வருகிறார். இந்த ஆதிகுணசேகரன் கேரடர் பிற்போக்குத் தனமாகவும் ஆணாதிக்கத்தோடும் சிந்திக்கும் குணாதிசயம் கொண்டது.

publive-image

இந்நிலையில் நடிகை கனிகா குடும்பத்தோடு மாலத்தீவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு நீச்சல் உடையணிந்து எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், என்ன ஈஸ்வரி இதெல்லாம்? ஒருவேளை ஆதி குணசேகரன் மட்டும் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று ஜாலியாக கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கனிகா, அவ்வபோது நீச்சல் உடை அணிந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் ஆதிகுணசேகரனுக்கு மட்டும் தெரிந்தால் என்னவாகும் தெரியுமா? என்று எதிர்நீச்சல் சீரியல் கதாப்பாத்திரத்தை ஒப்பிட்டு கமெண்ட்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment