எரும சாணி விஜய் மற்றும் நக்ஷத்திரா மூர்த்தி (புகைப்படம்: இன்ஸ்டாகிராம்)
தனது திருமணத்தில் குத்தாட்டம் போட்டப்படி வந்து தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்திராவுக்கு தாலி கட்டினார் ’எரும சாணி’ விஜய். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
எரும சாணி என்ற யூடியூப் வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய். இவரின் நகைச்சுவையான பேச்சும், நடிப்பும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கிடைத்த பிரபலம் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார் விஜய்.
ஹிப் பாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’, ’நான் சிரித்தால்’ போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தார். அதன் பின்பு தனது இயக்குனர் கனவை நனவாக்கிய விஜய், அருள்நிதி நடிப்பில் வெளியான ’டி பிளாக்’ என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அருள்நிதியின் நண்பராக விஜய்யும் சேர்ந்து நடித்தார்.
இந்தநிலையில், நடிகர் விஜய் தனது நீண்ட நாள் காதலியான நக்ஷத்திரா மூர்த்தியை கரம்பிடித்துள்ளார். மீடியா துறையில் இருக்கும் நக்ஷத்திரா மாடலிங், விலாகர், ஃபேஷன் டிசைனர் என பலமுகங்களைக் கொண்டவர். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தநிலையில், திருமணத்தின்போது விஜய் குத்தாட்டம் போட்டப்படி வந்து தாலி கட்டிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மேள தாளத்திற்கு ஏற்ப விஜய் மற்றும் அவரது நண்பர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil