scorecardresearch

இதைப் பெறுகிற முதல் இந்தியர்… மீனாவுக்கு கிடைத்த பெருமை!

நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய கௌரவம்; என்னவென்று தெரியுமா?

இதைப் பெறுகிற முதல் இந்தியர்… மீனாவுக்கு கிடைத்த பெருமை!

Actress meena got golden visa from UAE: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளார் நடிகை மீனா.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் நாயகியாக வலம் வந்தவர் மீனா. தமிழின் முன்னனி கதாநாயகர்கள் அனைவரும் ஜோடி சேர்ந்த நடித்துள்ள மீனா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். திறமையான நடிகையான மீனா, கடைசியாக சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தார். தற்போது, நடிகை மீனா, ஜே.எம்.சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா, சோனியா அகர்வால் மற்றும் ராய் லக்ஷ்மி நடித்த ‘ரவுடி பேபி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராம்கி, சத்யராஜ், ஜான் கோக்கன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதிக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்த கோல்டன் விசாவைப் பெற்ற சமீபத்திய நடிகை மீனா.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால தங்குவதற்கான அனுமதியாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சரின் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்திற்கான முழு உரிமையையும் வழங்குகிறது.

இதையும் படியுங்கள்: புஷ்பவனம் குப்புசாமி பொண்ணு’ ப்ரீ ஹனிமூனுக்கு எங்கே போயிருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க!

கோல்டன் விசாவைப் பெறுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ள நடிகை மீனா, “எனக்கு கோல்டன் விசா வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு நன்றி. எக்ஸ்போ 2020ல் அதைப் பெற்ற முதல் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக டிசம்பர் 2021 இல், நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர் பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார். பின்னர், நடிகை அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் ஜனவரியில் துபாய் அரசாங்கத்தால் கோல்டன் விசா வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress meena got golden visa from uae

Best of Express