நதியா மகள்களா? தங்கைகளா?: வைரலாகும் புகைப்படம் உள்ளே

இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா, இந்த லாக்டவுன் காலத்தில், தான் இணைந்தார்.

இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா, இந்த லாக்டவுன் காலத்தில், தான் இணைந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Nadhiya, tamil cinema, nadiya fitness

Actress Nadhiya

Nadiya : டிரெஸ், பொட்டு, கொண்டை, ஹேர்ஸ்டைல் என அனைத்துக்கும் நதியா ராயல்ட்டி வாங்கியிருந்தால், அதில் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்தளவில் 80 - 90-களில் நதியா ஃபேஷன் கொடி கட்டிப் பறந்தது.

மட்டனை மறந்துடுங்க பாஸ்! சென்னையில் தலைசுற்ற வைக்கும் விலை

Advertisment

ஹீரோயினாக நடித்த நதியா, அதன் பின்னர், அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது, ரசிகர்களால் அதை நம்ப முடியவில்லை. காரணம் ஹீரோயினுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அத்தனை இளமையாக இருந்தார். இப்போதும் அந்த இளமைக்கு குறைவில்லை. சமீபத்தில் தமிழ் வானொலி ஒன்றில் பேசிய நதியாவிடம், அவரது இளமை குறித்தே அனைவரும் கேள்வி எழுப்பினர். ”தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தான் அதற்கு மிகப் பெரிய காரணம். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் தான் என்னாலும் இருக்க முடிகிறது” என்றார் நதியா.

View this post on Instagram

Times of togetherness in memorable Japan 2019❤️???????????? #ThrowBackThursday #TBT #TravelDiaries

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on

இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா, இந்த லாக்டவுன் காலத்தில், தான் சமூக வலைதளங்களில் இணைந்தார். அதில் அவர் இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திடாத பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சென்ற வருடம் குடும்பத்தினருடன் ஜப்பான் சென்ற போது எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுளளார் நதியா. அதில் அவரது மகள்கள் சனம், ஜானா ஆகியோரும் உள்ளனர்.

Advertisment
Advertisements

சென்னையில் போலீஸ் எஸ்.ஐ.க்கு கொரோனா – தனிமை வார்டில் 30 போலீசார் அனுமதி

நதியா தனது மகள்களை வெளிக்காட்டாமல் இருந்த நிலையில், அவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். நதியாவின் மகள்கள் அவரது தங்கைகள் போல இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். 53 வயதாகும் நதியா தற்போதும் இளமையாக தோற்றமளிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: