scorecardresearch

கர்நாடகா தோல்வி பிரச்சனை இல்லை; அண்ணாமலை கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம்; நடிகை நமீதா

கர்நாடகா தேர்தல் தோல்வி பிரச்சனை இல்லை; அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்; நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான நமீதா நம்பிக்கை

Namitha
கோவை நிகழ்ச்சியில் நடிகை நமீதா

கோவை தெற்கு பா.ஜ.க சார்பில் “பா.ஜ.க குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான நமீதா கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நமீதா கூறியதாவது, அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். இன்று எனது முதல் அன்னையர் தினம், அதனால் இந்த நிகழ்ச்சியை முடிந்தவுடன் உடனடியாக சென்னை கிளம்பி வீட்டிற்கு செல்ல உள்ளேன். பா.ஜ.க மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பா.ஜ.க கட்சி நன்கு முன்னேறி வருகிறது. மேலும் அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பா.ஜ.க பெயர் ஒலிக்கிறது.

இதையும் படியுங்கள்: அரசியல்… ராஜீவ் காந்திக்கு நான் கொடுத்த சத்தியம்: மனம் திறந்த சரோஜாதேவி

கர்நாடகா தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நமீதா, பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம் அவர் தனது பணியை சிறப்பாக செய்வார். என் தலைவரைப் பற்றி இவ்வாறு பேசக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், கர்நாடகா தோல்வி பெரிய பிரச்சனை இல்லை, அடுத்த முறை வெற்றி பெறலாம். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே இன்று வெற்றி பெறவில்லை என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம் என இவ்வாறு தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress namitha plays cricket at kovai for bjp event