scorecardresearch

அரசியல்… ராஜீவ் காந்திக்கு நான் கொடுத்த சத்தியம்: மனம் திறந்த சரோஜாதேவி

ராஜீவ் காந்திக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இப்ப வரை மீறவில்லை; நடிகை சரோஜாதேவி சுவாரஸ்ய தகவல்

Saroja and Rajiv
நடிகை சரோஜாதேவி மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொடுத்த சத்தியத்தை கடைசி வரைக்கும் மீறவில்லை என நடிகை சரோஜாதேவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்ப கட்டத்தில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் நடிகை சரோஜாதேவி. அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று பெயர் சரோஜாதேவி, 70, 80களில் உச்ச நடிகையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வந்தார். அப்போதை உச்ச தமிழ் நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி. அதன்பின்னர் 90கள் மற்றும் 2000க்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: 35 வயதுன்னா யாரும் நம்ப மாட்டாங்க… ஜீரோ சைஸ் பாடி போட்டோ ஷேர் செய்த பிரபல தமிழ் நடிகை!

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த சரோஜாதேவி, தனது திரைத்துறை வாழ்க்கை குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார். அப்போது தான் அரசியலுக்கு வராத காரணம் குறித்து சுவாரசியமான தகவலை சரோஜா தேவி பகிர்ந்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய சரோஜாதேவி, ”என்னை டெல்லிக்கு அழைத்த ராஜீவ் காந்தி மைசூரில் மண்டியா என்ற தொகுதியில் போட்டியிட சொன்னார். ஆனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலில் இருந்தால் ஒரு தரப்பினருக்கு நல்லவராக இருக்கும், இன்னொரு தரப்பினருக்கு கெட்டவராக இருக்கும். ஆனால் நான் ஒரு பொதுவான ஆள். எனக்கு அரசியல் வேண்டாம் என்று கூறினேன்.

உடனே ராஜீவ் காந்தி, அப்படியானால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டார். நானும் சத்தியம் செய்து கொடுத்தேன். இப்ப வரைக்கும் அந்த சத்தியத்தை நான் மீறவே இல்லை.” இவ்வாறு சரோஜாதேவி அந்த வீடியோவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Actress saroja devi says strictly follows rajiv gandhi promise