நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரோஷா. இவர் நடிகை ராதிகாவின் சகோதரியாவார். அந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். மேலும், முதல் படத்திலேயே நீச்சலுடையில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்: அரசியல்… ராஜீவ் காந்திக்கு நான் கொடுத்த சத்தியம்: மனம் திறந்த சரோஜாதேவி
பின்னர் கமல்ஹாசன் உடன் ’சூரசம்ஹாரம்’, விஜயகாந்த் உடன் ’செந்தூரப்பூவே’, மீண்டும் கார்த்தி உடன் ’பாண்டி நாட்டு தங்கம்’, ’இணைந்த கைகள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். நிரோஷா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தார். நடிகை நிரோஷா நடிகர் ராம்கியை கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சிறிது காலம் நடிப்புக்கு இடைவெளி விட்டவர், மீண்டும் திரைபடங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் கத்திச்சண்டை, தானா சேர்ந்தக் கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது சீரியல்களிலும் நிரோஷா நடித்து வருகிறார். குறிப்பாக’ சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற சீரியல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் நைட்டியில் எடுத்தப் புகைப்படத்தை பதிவிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது மலரும் நினைவுகளை கமெண்ட்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil