/tamil-ie/media/media_files/uploads/2022/07/pooja.jpg)
'44 வயசு ஆச்சு... இனி சித்தி கேரக்டர் கொடுப்பாங்க!': அஜித் ஹீரோயின் ஓபன் டாக்
எனக்கு 44 வயசாயிடுச்சு; இனி நடிக்க வந்தால் சித்தி கேரக்டர் தான் பண்ணனும்; நடிகை பூஜா ஓபன் டாக்
/tamil-ie/media/media_files/uploads/2022/07/pooja.jpg)
Advertisment
Actress Pooja tells her age in social media fans surprise: நடிகை பூஜா சமூக வலைதளங்களில் தனது வயதை வெளிப்படையாக தெரிவித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடிகர் மாதவனின் ரொமாண்டிக் படங்களில் ஒன்றான ஜே ஜே திரைப்படம் மூலம் கடந்த 2003ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. தனது இயல்பான நடிப்பு, துள்ளலான நடனம் கவர்ச்சி, இளமை ததும்பும் அழகு என முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதையும் படியுங்கள்: என்றும் ராஜா தான்; விக்ரம் மூலம் நிரூபித்த கமல்ஹாசன்
அடுத்ததாக, அஜித்துடன் அட்டகாசம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இவரது துறுதுறுவென்ற உடல்மொழி இவரை சிறப்பான நடிகையாக வெளிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, தம்பி, பட்டியல், பொறி, ஓரம்போ, நான் கடவுள் என அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். இதில் ஆர்யாவுடன் இரண்டாவது முறையாக நடித்த நான் கடவுள் படம் இவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது. நான் கடவுள் படத்தில் சிறந்த நடிப்பிற்காக பூஜாவுக்கு தமிழக அரசு விருது மற்றும் பிலிம்பேர் விருது கிடைத்தது.
கடைசியாக விடியும் முன் என்ற தமிழ் படத்தில் நடித்தார் பூஜா. பல்வேறு விருதுகளைப் பெற்ற சிறந்த நடிகையாக இருந்தாலும், தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலும் கவனம் செலுத்த தவறியதால் பூஜாவுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கடினமானது. பின்னர் இலங்கை தொழிலதிபர் ஒருவரை திருமணம் (2016) செய்து கொண்டு செட்டிலான பூஜா, தொடர்ந்து நடிக்கவில்லை. இதனையடுத்து, பூஜாவின் நடிப்பை ரசிகர்கள் மிஸ் செய்து வந்தனர்.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காலத்தில் ஒரு கோஸ்ட் வாழ்ந்தது என்று கார்த்திக் என்ற ரசிகர் ஒருவர் பூஜாவின் புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பூஜா, நான் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக இருப்பதில்லை. என்னை ஞாபகம் வைத்திருப்பதற்கு ரசிகர்களுக்கு நன்றி. மேலும் அனைவரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க கடவுள் ஆசீர்வதிக்கப்படும் என்றும் கமெண்ட் செய்திருந்தார்.
💞💞💞💞... I have not been active on Twitter da. Thank you very much for remembering. And to everyone, loads of love, wishing you all the best of Health, Joy and Peace & God Bless you all. 💕💕💕💕💕
— Pooja Umashankar (@PoojaUmashankar) July 1, 2022
இதையடுத்து மற்ற ரசிகர் ஒருவர், மீண்டும் நடிக்க வர பூஜாவிடம் கேட்க, அதற்கு அவர், ஐயோ தற்போது 44 வயதாகிவிட்டது என்றும் மீண்டும் நடிக்க வந்தால் சித்தி கேரக்டர்தான் பண்ணனும் என்றும் கூறியுள்ளார்.
Aiyoooo. 🙏🏽🙏🏽🙏🏽. Too old now da. 44 years aiyidachi. Comebackna, Chitthi role than pannanum. 🤣🤣🤣😜😜😜
— Pooja Umashankar (@PoojaUmashankar) July 1, 2022
பொதுவாக நடிகைகள் தங்கள்து வயதை வெளிப்படையாக சொல்லாத நிலையில், பூஜா போல்டாக வயதை சொன்னது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.