Actress Poonam Bajwa yoga photos goes viral: நடிகை பூனம் பாஜ்வா யோகா செய்யும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. பின்னர் ஜீவா உடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஒரு சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த பூனம் பாஜ்வா, பின்னர் தமிழ் சினிமாவில் இரண்டாம் ஹீரோயினாக, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது பெரிதாக படங்கள் இல்லாத நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் இவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் உடையில் யோகா செய்யும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படங்களை லட்சக்கணக்கானோர் லைக்ஸ் செய்து வருகின்றனர்.