தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை ரம்பா கடந்த 23ம் தேதி 3வது குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தனதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நடிகை ரம்பா மற்றும் இந்திரனுக்கு 3வது குழந்தை பிறந்தது:
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இவர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர், நடுவில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்தார்.
இறுதியில் இருவரும் தங்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபங்களை முடித்துகொண்டு சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்றம் உதவியோடு இப்போது இருவரும் இணைந்து வாழ்கின்றனர்.
மூன்றாவது முறையாக கர்ப்பமான ரம்பாவிற்கு சீமந்த செய்யப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது ரம்பா மூன்றாவது முறையாக ஆண் குழந்தைக்கு அம்மா ஆகியுள்ளார். குழந்தை செப்டம்பர் 23ம் தேதி பிறந்துள்ளது.
இந்த நல்ல செய்தியை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தங்களின் குடும்பத்திற்கு வந்துள்ள புதிய நபரின் வரவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
3 ஆவது முறையாக கர்ப்பமான ரம்பா... பிரம்மாண்ட விழா நடத்திய கணவர்!