நடிகை ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக அவரது காதல் வாழ்க்கை அடிக்கடி சர்ச்சைக்குள்ளானது என்பதை மறுப்பதற்கில்லை. அமிதாப் பச்சனுடனான அவரது தொடர்பு இன்னும் நிறைய பேசப்படுகிறது. ஏனெனில் பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகையான ரேகா மெகாஸ்டார் அமிதாப் பச்சன் மீதான தனது காதலை ஒருபோதும் மறைக்கவில்லை. ஆனால் ரேகா தனது பெண் செயலாளர் ஃபர்சானாவுடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படும் தகவல் வேகமாக பரவி வருகிறது.
யாசர் உஸ்மான் எழுதிய ரேகாவின் வாழ்க்கை வரலாறு, ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி, பயோகிராபியில் ரேகா தனது மேலாளர் ஃபர்சானாவுடன் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகக் கூறப்பட்டதாக தகவல்கள் பரவத் தொடங்கின. ஆனால், யாசர் உஸ்மான் இதனை கடுமையாக மறுத்து, அவை கட்டுகதை என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: காவாலா பாட்டுக்கு வந்த சோதனையா இது? பிக்பாஸ் ஜனனியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
ரேகாவின் படுக்கையறைக்குள் அவரின் செயலாளரைத் தவிர வேறு யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று சுயசரிதை கூறுவதாக அறிக்கைகள் முன்பு கூறியிருந்தன. “ரேகாவுக்கு ஃபர்சானா சரியான ஜோடி. ஃபர்சானா அவருடைய ஆலோசகர், அவருடைய தோழி மற்றும் அவருடைய ஆதரவாளர், ஃபர்சானா இல்லாமல் ரேகா வெறுமனே வாழ முடியாது. உண்மையில், ரேகாவின் நம்பிக்கைக்குரிய செயலாளரான ஃபர்சானா மட்டுமே, அதாவது அவரது காதலி என்று சிலரால் கூறப்படும் ஃபர்சானா அவரது படுக்கையறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்; வீட்டு உதவியாளர்கள் கூட நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்," சுயசரிதையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், பயோகிராபியின் ஆசிரியர் யாசர் உஸ்மான் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார், அவற்றை தூய கட்டுக்கதை என்று கூறினார். மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், “எனது ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி பயோகிராபி குறித்து கூறப்படும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற தகவல் முழுக்க முழுக்க புனைகதை, பொய்மைப்படுத்தல் மற்றும் பரபரப்பை உருவாக்கும் நோக்கத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டவை” என்றும் அவர் கூறினார்.
“ஊடகக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எனது புத்தகத்தில் முற்றிலும் இல்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். மேலும், முழு கையெழுத்துப் பிரதியிலும், 'லிவ்-இன் ரிலேஷன்ஷிப்' அல்லது 'உறவை பாலியல் என்று கூறும் சொற்றொடர்கள் வாழ்க்கை வரலாறு' புத்தகத்தில் பயன்படுத்தப்படவில்லை. இந்த தவறான தகவல்கள் மோசமான ஜர்னலிசத்தின் விளைவாகும் மற்றும் சில வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் வெளிவருகின்றன. எனக்குக் கூறப்பட்ட தகவல்கள் அல்லது எனது புத்தகமான ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி உடனடியாகத் திருத்தப்படாவிட்டால், அதற்குப் பொறுப்பான பிரசுரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்" என்று யாசர் உஸ்மான் கூறினார்.
இதனிடையே ரேகாவின் மறைந்த கணவரின் தற்கொலைக்கு ஃபர்சானா தான் காரணம் என்றும் புத்தகம் கூறுவதாக கூறப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபராக இருந்தவர் முகேஷ் அகர்வால். 1990 இல், ரேகா லண்டனில் இருந்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டார். அதேநேரம் முகேஷ் அகர்வால் தான் யாரையும் குற்றம் சொல்லவில்லை என்றும், தனது சோகமான முடிவுக்கு நிச்சயமாக ரேகாவைக் குறை கூறவில்லை என்றும் தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்துவிட்டார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, ரேகா ஒரு கொலைகாரி மற்றும் ஒரு சூனியக்காரி என்று முத்திரை குத்தப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுபாஷ் காய், அனுபம் போன்ற அனுபவசாலிகள் உட்பட ஒட்டுமொத்தத் துறையினரும் ரேகாவுக்கு எதிராக எப்படித் திரும்பினர் என்பதையும் புத்தகம் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.