நடிகை ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் மிரியம் மா திரைப்படம்; ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
'கடலோர கவிதைகள்' ரேகா கனமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'மிரியம் மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Advertisment
அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மிரியம் மா'. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், வி.ஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி வருகிறது. நடிகை ரேகா அழுத்தமான வேடத்தில் நடிப்பதால், 'மிரியம் மா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 'மிரியம் மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ரேகாவின் தோற்றம், ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய ஆவலை தூண்டி உள்ளது.
Advertisment
Advertisements
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''பெண்ணாகப் பிறந்து ஒவ்வொருவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக்கோடான இவ்விசயத்தில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் சவால்கள் தான் படத்தின் கதை,'' என்று கூறினார். வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil