எங்கள் வீட்டு சாம்பாரில் கறி எலும்பு இருந்ததைப் பார்த்து கவுண்டமணி அண்ணன் விழுந்து விழுந்து சிரிச்சு என்னை கிண்டல் செய்தார் என நடிகை ஷர்மிலி பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
தமிழ் சினிமாவில் 90களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஷர்மிலி, சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த வீடியோவில் கவுண்டமணி உடனான தனது மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
இதையும் படியுங்கள்: வேற கட்சிக்காரனா இருந்தாலும் ஸ்டாலின் செய்யும் உதவி: பிரபல காமெடி நடிகர் நெகிழ்ச்சி
அந்த வீடியோவில், நான் சூட்டிங்கிற்கு அடிக்கடி காலையிலே ஆப்பம், பாயா எல்லாம் எடுத்துட்டு போவேன். சாமுண்டி படம் நடித்தப்போது, சூட்டிங்கில் இருந்த சரத்குமார், கவுண்டமணி உள்ளிட்டோருக்கு எங்கள் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வந்தோம். எங்கள் வீட்டில் சாம்பார், பாயாசம் செய்து கொண்டு வந்தாங்க. சாம்பாரில் கறி எலும்பு போட்டு இருந்தாங்க. கவுண்டமணி அண்ணன் முருங்கைகாய் என கடித்தார். ஆனால் கடிக்க முடியவில்லை. என்ன எலும்பு மாதிரி தெரியுதே என கேட்க, நான் கறி எலும்பு என சொன்னதும் பதறிட்டார். சாம்பார்னாலே வைசம் தான், அதில் ஏன் கறி எலும்பு போடுறீங்கனு கேட்டார். நான் எலும்பு சாம்பார்னு சொன்னேன், ஆச்சரியமா பார்த்தார்.
அடுத்ததாக பாயாசத்துல கறிவேப்பிலை இருந்துச்சு. எங்க ஊர் ராமநாதபுரம் பக்கம் வாசனைக்காக பாயாசத்தில் கறிவேப்பிலை போடுவாங்க. அன்னைக்கு சமைச்சது வேற எங்க பாட்டி. பாயாசத்துல கறிவேப்பிலையா என விழுந்து விழுந்து சிரிச்சு, என்னை அவமானப்படுத்திட்டார். ஷர்மிலி வீட்டில் யாரும் சாப்பிடாதீங்கனு சிரிச்சுக்கிட்டே சொன்னார். இன்னைக்கு அதுமாதிரி யாரும் வீட்டில் இருந்து கொண்டு வந்து சாப்பிடறது இல்லை. ஆர்டிஸ்ட்டிக்குள்ள பழகிக்கிறதே இல்லை.
எனக்கு கவுண்டமணி கூட நடிக்க சான்ஸ் வந்தப்போ, எனக்கு காமெடி வராது நடிக்க மறுத்தேன். எனக்கு டான்ஸ், கிளாமர் ரோல் தான் வரும் தவிர்த்தேன். ஆனால் கவுண்டமணி அண்ணன், எனக்கு தெரியாம என்னை அவருக்கு ஜோடியா நடிக்க வச்சாரு. நான் சூட்டிங்கில் பயந்தப்போது, எனக்கு தைரியம் கொடுத்து பண்ண வச்சாரு. அடுத்து அவருக்கு வந்த 6 படங்களேயும், என்னை அவருக்கு ஜோடியா நடிக்க வச்சாரு. எனக்கு டயலாக் பேச வராதப்ப, கிளாமர் எக்ஸ்பிரசன் காமிச்சு சமாளிச்சேன். யாராச்சும் தப்பா நடிச்சா கவுண்டமணி அண்ணன் திட்டிடுவாரு. நடிக்கும்போது தான் காமெடியா இருப்பாரு. சீன் இல்லாதப்ப அமைதியா யார்கிட்டயும் பேசாம தான் இருப்பாரு. இவ்வாறு ஷர்மிலி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil