ரஜினி சாரே ஒரு ஆர்டிஸ்ட் இன்னொரு ஆர்டிஸ்ட்க்கு உதவமாட்டாங்கனு சொல்லியிருக்கார். உடல்நிலை சரியில்லாதபோது ரஜினி சார் என்னிடம் போன் செய்து பேசினார் என நகைச்சுவை நடிகர் போண்டா மணி கூறியுள்ளார்.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு நகைச்சுவை நடிகர் போண்டா மணி பேட்டியளித்தார். அந்த வீடியோவில், சில நாட்கள் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். நிறைய பேர் அப்போது எனக்கு உதவினார்கள். ஆனால். ஒரு சிலர் மேல் எனக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. நடிகர் சூரிக்கு ஆரம்ப கட்டத்தில் நிறைய உதவி செய்திருக்கிறேன். அவர் எங்கள் வீட்டில் அடிக்கடி சாப்பிடுவார். சூரி பெரிய நடிகராக வந்தப்பின் என்னை கண்டுக்கொள்ளவில்லை.
இதையும் படியுங்கள்: என் கணவரை தாத்தானு கிண்டல் பண்றாங்க… நடிகை நீலிமா ராணி வேதனை
விடுதலை படம் பார்த்தேன். சூரி சிறப்பாக நடித்திருந்தார். சூரியை வைத்து இப்படி ஒரு படம் கொடுத்ததற்கு வெற்றிமாறனுக்கு பாராட்டுகள். நானும் சின்ன பண்ணை பெரிய பண்ணை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தை, அதன் தயாரிப்பாளர்கள் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இல்லனா அந்தப்படம் எனக்கு ஒரு திருப்புமுனையா இருந்திருக்கும்.
எனக்கு அடிப்பட்டு உடல்நிலை சரியில்லாதபோது, மயில்சாமி முதல் ஆளாக ஓடி வந்து உதவினார். சரத்குமார், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு உள்ளிட்டோர் கொடுத்ததாக 1 லட்சம் பணம் கொடுத்தார். எந்த நடிகர்களும் கண்டுக்கொள்ளவில்லை என நான் கூறியதாக யூடியூப்பில் வந்த வீடியோ பார்த்து மயில்சாமி வருத்தப்பட்டு பேசினார். அதற்கு நான் அப்படி வீடியோ வந்ததால் தான் நிறைய உதவி கிடைச்சிருக்கு. முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு உதவினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்து என்னை பார்த்தார் என்று கூறினேன்.
சூரி வடிவேலுவிடம் இல்லாததால் தான் பெரிய ஆளா வந்துட்டார். நாங்க எல்லாம் மாட்டிக்கிட்டோம். வடிவேலு உதவமாட்டாருனு சூரி தெளிவா இருந்திருக்கார். ரஜினி சாரே ஒரு ஆர்டிஸ்ட் இன்னொரு ஆர்டிஸ்ட்க்கு உதவமாட்டாங்கனு சொல்லியிருக்கார். உடல்நிலை சரியில்லாதபோது ரஜினி சார் என்னிடம் போன் செய்து பேசினார். விஜய் சேதுபதியை நான் பார்த்தது கூட கிடையாது, அவர் 1 லட்சம் கொடுத்தார். தனுஷ்-ம் ஒரு லட்சம் கொடுத்து உதவினார். தம்பி ராமய்யாவும் எனக்கு உதவி செய்யவில்லை. சந்தானம் எனக்கு போன் செய்து நலம் விசாரித்தார்.
நிறைய இயக்குனர்கள் வடிவேலு படம் நடிக்காம இருந்த காலத்தில், அவருடன் இருந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனக்கு ஆபரேசன் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு உதவ அஜித், விஜய், சூர்யா போன்ற முக்கிய நடிகர்களிடம் கேட்டிருக்கிறேன். உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
முதலமைச்சர் தலையிட்டுள்ளதால், எனக்கு டாக்டர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் இலவசமாக டயாலிசிஸ் செய்கிறார்கள். இன்னொரு கட்சிக்காரனாக இருந்தாலும் எனக்கு உதவி செய்துள்ளதால், முதலமைச்சர் மீது பெரிய மரியாதை வைத்துள்ளேன்.
வடிவேலு மீண்டும் வர வேண்டும் என்று நாங்கள் எல்லாம் ஆசைப்பட்டோம். ஆனால் அவர் எங்களை விட்டுவிட்டு புது கூட்டணி அமைத்தார். படம் ஓடவில்லை. வடிவேலு நிச்சயம் பெரிய நடிகர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil