சீமராஜா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் 18 வருடங்களுக்கு பின்பு, பார்த்தேன் ரசித்தேன் படம் குறித்த உண்மை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்ரன்.
Advertisment
சிம்ரன் வெளியிட்ட உண்மை:
இயக்குநர் சரண் இயக்கத்தில் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 11 தேதி வெளியான திரைப்படம் பார்த்தேன் ரசித்தேன். இந்த படத்தில், ஹீரோவாக நடிகர் பிரசாந்த், ஹீரோயினாக நடிகை லைலா மற்றும் வில்லியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார்.
பார்த்தேன் ரசித்தேன் படம்
Advertisment
Advertisement
இந்த படத்தில் பிரசாந்தின் நெருங்கிய நண்பராக இருக்கும் சிம்ரனுக்கு திடீரென அவர் மீது காதல் ஏற்படுகிறது...
ஆனால் பிரசாந்துக்கோ லைலா மீதே காதல் உள்ளது. இந்த விஷயம் தெரிந்து பிரசாந்துக்கு உதவுவது போல் காலை வாரி விடுகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியை விட சிம்ரனின் நடிப்பு அடி தூள். அதிலும் படத்தின் கிளைமேக்ஸில் லைலாவுக்கு விஷம் கொடுத்துவிட்டு பிரசாந்தை கதற விடும் காட்சியில் பிரமிக்க வைக்கிறது அவரின் நடிப்பு.
இந்த கதாபாத்திரம் குறித்து 18 வருடங்களுக்கு பின்னர், சமீபத்தில் நடந்த சீமராஜா பட நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார். அதில், “பார்த்தேன் ரசித்தேன் படத்திலும் வில்லி ரோல் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எல்லோரும் ஏன் வில்லியாக நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் ஒரு ஆர்டிஸ்ட் என்றால் எப்பவும் ஹீரோயினாகவும், டான்ஸ் ஆடுவதும் மட்டும் இல்லை. சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதும் தான்” என்றார்.