அடடே! சினேகாவுக்கு இரண்டாவது குழந்தையாம் – அதுவும் பெண் குழந்தை! பிரசன்னாவின் கியூட் ட்வீட்
பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு இரண்டாவதாக இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவின் திரை பிரபலங்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடிக்கும்போது சினேகா – பிரசன்னா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு…
actress sneha 2nd baby birth prasanna cinema news – அடடே சினேகாவுக்கு இரண்டாவது குழந்தை – அதுவும் பெண் குழந்தை! பிரசன்னாவின் கியூட் ட்வீட்
பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு இரண்டாவதாக இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவின் திரை பிரபலங்களாக இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடிக்கும்போது சினேகா – பிரசன்னா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு விஹான் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 2-வது முறையாக கர்ப்பமானார் சினேகா. கர்ப்பத்துடனேயே ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார்.
தற்போது, தங்களுக்கு மகள் பிறந்திருப்பதாக பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். ‘தை மகள் பிறந்தாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations!!! Hope Mumma and the princess are doing well!!!! Huge hug to the big brother!