‘நான் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்’ – அர்ஜுன் ரெட்டி நடிகர் ஷாக் ட்வீட்

விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் சிவாவாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. 29 வயதாகும் அவர் ட்விட்டரில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ராகுல் தனது ட்விட்டரில், “நான் சிறு பிள்ளையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். என் துக்கம் பற்றி இதற்கு மேல்…

By: January 23, 2020, 3:16:41 PM

விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் சிவாவாக நடித்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. 29 வயதாகும் அவர் ட்விட்டரில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராகுல் தனது ட்விட்டரில், “நான் சிறு பிள்ளையாக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். என் துக்கம் பற்றி இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைத்தும் காயப்படுத்துகிறது.

அசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நீதியே இல்லை. தற்காலிக ஆறுதல் தான். நல்லபடியாக நடந்து கொள்ளுமாறு ஆண்களுக்கு கற்றுக் கொடுங்கள். தைரியமாக இருங்கள். நல்லபடியாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தன்னை யார் பலாத்காரம் செய்தது என்ற விபரத்தை ராகுல் தெரிவிக்கவில்லை. அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் காமெடி செய்து எங்களை சிரிக்கை வைக்கும் உங்களுக்குள் இப்படி ஒரு சோகமா என்று தெரிவித்துள்ளனர்.

“நான் இப்போது முயற்சித்தாலும் நீங்கள் சந்தித்த அதிர்ச்சியை என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் சொல்ல விரும்புகிறேன், வலுவாக இருங்கள். நீங்கள் ஒவ்வொரு மோசமான நிகழ்வுகளில் இருந்தும் வெளியே வந்து அதை உங்கள் திறனுக்கு ஏற்றவாறு கையாண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு போராளி. ஐ லவ் யூ பிரதர்!” என்று நடிகர் பிரியதர்ஷி ராகுலின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார்.

பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லி ட்வீட் செய்துள்ள ராகுல், “மகத்தான ஆதரவுக்கு நன்றி. உங்கள் கனிவான வார்த்தைகள் எல்லாவற்றையும் விட எனக்கு உதவியுள்ளன. உங்கள் குழந்தைகளை உன்னிப்பாகக் காத்துக்கொள்ளவும், திடீர் நடத்தை மாற்றங்களைக் கவனிக்கவும் நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

நடிக்க வரும் முன்பு ராகுல் ராமகிருஷ்ணா பத்திரிகையாளராக இருந்தார். பாடல்கள் எழுதியுள்ளார். திரைக்கதை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

Tamil NewsEntertainment News In TamilActress Bhama Announces Her Engagement To Marry Businessman ‘எல்லாம் அவன் செயல்’ – பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Arjun reddy actor rahul ramakrishna tweet i was raped

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X