/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sunaina.jpeg)
ரெஜினா படக்குழுவினருடன் நடிகை சுனைனா
நடிகை சுனைனா மாறுபட்ட கதையில் நடித்து வெளியாகவுள்ள ரெஜினா திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா கோவையில் நடைபெற்றது.
காதல் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனேனா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள "ரெஜினா" திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளிவர உள்ளது.
இதையும் படியுங்கள்: பசும்பொன் தேவர் வாழ்ந்த மண்ணில் மரக் கன்று: நடிகர் விவேக் ஆசையை நிறைவேற்றிய பூச்சி முருகன்
/tamil-ie/media/media_files/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-31-at-10.49.39-1.jpeg)
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் நடைபெற்றது. இதில் திரைப்படத்தின் இயக்குனர் டாமின் டி சில்வா மற்றும் இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான சதீஸ் நாயர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சேர்மன் கிருஷ்ணன், நடிகை சுனேனா உள்ளிட்ட பட குழுவினர் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டனர்.
முன்னதாக படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரெஜினா திரைப்படத்தின் இயக்குனர் டாமின் டி சில்வா கூறியதாவது:
இது ஒரு வித்தியாசமான கதையாகவும் ஒரு ரிவெஞ்சு கொடுக்கும் கதையாகவும் அமைந்துள்ளது. குடும்ப பெண்ணாக இருந்து ஒருவர் பழிவாங்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. குறிப்பாக செய்திகளை பார்க்கும் பொழுது அதில் பல்வேறு குற்ற சம்பவங்களும் பொது நிகழ்வுகளும் படமாக வெளி வருகின்றன. தனக்கு விடுதலை மற்றும் அட்டகத்தி போன்ற படங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படம் பொதுமக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-31-at-10.49.39.jpeg)
இதைத் தொடர்ந்து பேசிய நடிகை சுனேனா கூறியதாவது, “ரெஜினா திரைப்படத்திற்காக இரண்டு மாதம் தொடர்ந்து நடித்துள்ளதுள்ளேன். ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் நிலையில் தனக்கு இந்த கதை பிடித்திருந்தது. நான் ஒரு ஸ்டேஜ் ஆர்ட்டிஸ்ட். நல்ல கதையாக இருந்தால் எந்தவித கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக இருக்கிறேன், என்று கூறினார்.
கோவையில் ரெஜினா பட டீசர் வெளியீட்டு விழாவில் பாட்டுப்பாடி அசத்திய நடிகை சுனைனா#Kovai#Sunainapic.twitter.com/sbDwgSCTlr
— Indian Express Tamil (@IeTamil) May 31, 2023
கடந்த 15 ஆண்டுகளாக அதே அழகோடு இருப்பதன் ரகசியம் குறித்து கேட்ட பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, கதைக்கு தகுந்தார்ப்போல் தன்னை மாற்றிக்கொள்வது தான் என சுனைனா பதிலளித்தார். மேலும், முன்னேற்றம் கிடைக்க அதிகம் உழைக்க வேண்டும் எனவும் தன்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு தன்னுடைய குடும்பமும் ஒரு காரணம் என்றும் சுனைனா குறிப்பிட்டார்.
நடனமாடியும் - பாட்டு பாடியும் கோவை திரைப்பட விழாவில் கலக்கிய நடிகை சுனைனா#Sunaina#Kovaipic.twitter.com/WYxAlPN8i4
— Indian Express Tamil (@IeTamil) May 31, 2023
பின்னர் திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளரும் திரைப்படத்தின் இசையமைப்பாளருமான சதீஸ் நாயர் கூறியதாவது, இந்த திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளதாகவும் இதில் ரிவஞ்சு தொடர்பாக ஒரு குத்துப்பாட்டும் உள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக மாறுபட்ட கதைகளத்தை கொண்டுள்ள இத்திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்கும் வகையில் பாடல்களுக்கு இசையமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் டீசர் விழாவில் நடிகை சுனைனா, தான் நடித்து வெளிவந்த மாசில்லாமணி திரைப்படத்தின் ஓடி ஓடி விளையாடு பாட்டிற்கு நடனமாடியதுடன, காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் உனக்கென நான் எனக்கென நீ என்ற பாடலையும் பாடி அசத்தினர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.