கையில் குத்தியிருந்த டாட்டூவை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமன்னா; ரசிகரை கட்டியணைத்து நெகிழ்ந்த வைரல் வீடியோ
தனது முகத்தை படமாக கையில் பச்சை (டாட்டூ) குத்தியுள்ள ரசிகரைப் பார்த்து கண்கலங்கிய நடிகை தமன்னா, அந்த ரசிகரை கட்டி அணைத்து நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. பின்னர் சூர்யா, விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், பான் இந்தியா படமான பாகுபலியில் தனது நடிப்பு திறமையை தமன்னா வெளிப்படுத்தியிருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேடி நடித்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும், நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் விஜய் வர்மா, கஜோல் ஆகியோருடன் இணைந்து தமன்னா நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸில் நடித்தப்போது தனக்கு விஜய் வர்மா மீது காதல் வந்ததாக தமன்னா தனது காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.
Advertisment
Advertisements
பல்வேறு மொழிகளில் சிறப்பாக நடித்து வரும் நடிகை தமன்னாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் ரசிகர்களில் ஒருவர் செய்த செயலைப் பார்த்து நடிகை தமன்னா கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். அப்போது ரசிகர் ஒருவர், அவர் காலில் விழுந்ததால் தமன்னா அதிர்ச்சியடைந்தார். இதன் பின் அந்த ரசிகர் தமன்னாவிற்கு பூங்கொத்து கொடுத்து தனது கையைக் காண்பித்தார். அதில் நடிகை தமன்னாவின் முகம் பச்சை (டாட்டூ) குத்தப்பட்டிருந்தது. இதைக் கண்ட நடிகை தமன்னா கண்கலங்கினார்.
மேலும், அந்த ரசிகரின் பனியனிலும் தமன்னா படம் இருந்தது. அதில் ’ஐ லவ் தமன்னா’ என எழுதப்பட்டிருந்தது. இதன் பின் அந்த ரசிகரிடம் இருந்து பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட தமன்னா, அந்த ரசிகரைக் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அந்த ரசிகருக்கு திரும்ப திரும்ப நன்றியைக் கூறிக் கொண்டே இருந்தார். பின்னர் தமன்னா அந்த ரசிகரிடம் சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.