நடிகர் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, `நிறைகுடம்’ உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபினய வெங்கடேஷ கார்த்திக் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபினய்யின் மனைவியும் மருத்துவர் தான்.
இப்போதாவது யோசிக்கின்றார்களே? இந்த மெடிக்கல் ஷாப் தான் இப்போ வைரல் ஹிட்!
அபினய் பெங்களூரு மெடிக்கல் கல்லூரியில் உதவிப் பேராசிரியரா இருந்திருக்கிறார். அவரது மனைவி ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. இந்த எதிர்பாராத மரணம் குறித்துப் பேசிய அபினய்யின் தந்தை கருணாகரன், “அபினய்க்கு ஸ்போர்ட்ஸ்ல குறிப்பா கிரிக்கெட்ல விருப்பம் அதிகம். மெடிசின் படிக்கத் தேர்ந்தெடுத்தப்பக் கூட ஸ்போர்ட்ஸ் மெடிசின் தான் எடுத்துப் படிச்சான்.
எங்க குடும்பத்துக்கு என்ன சாபக்கேடோ தெரியல. எனக்கு 5 வயசா இருந்தப்ப, என்னுடைய அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்தார். என்னுடைய அண்ணன் ஒருத்தரும் 40 வயசுல மாரடைப்பால இறந்தார். இப்ப என் ஒரே மகனும் அதே ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். என்ன சொல்றதுன்னே தெரியலை” என்றார்.
கருணாகரனும் வாணிஸ்ரீயும் காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். பிள்ளைகள் இரண்டு பேருமே டாக்டர்கள். அபினய்யும் காதல் திருமணம் செய்துக் கொண்டவர் தான். சில மாதங்களுக்கு முன்பு சொத்தைப் பிரிப்பதில், குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது, அப்பா - மகன், அம்மா - மகள் என இரு தரப்பாக மாறியிருக்கிறது அந்த சண்டை. சொத்துப் பிரச்னை தந்த மன அழுத்தத்தால் இப்படியாகியிருக்கலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
”மனோதிடம் வெகுவாக ஈர்க்கிறது” : 1200 கி.மீ சைக்கிள் பயணம் செய்த சிறுமிக்கு இவான்கா பாராட்டு!
ஆனால் வேறு சிலரோ அபினய் தற்கொலை செய்திருப்பதாகக் கூறுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து வந்த அபினய் சென்னைக்கு வராமல், அப்பா கருணாகரன் இருக்கும் திருக்கழுக்குன்றம் இல்லத்திற்கு போயிருக்கிறார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்த விசாரணைகள் நடைப்பெற்று வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”