கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுதந்திரத்தை எடுத்து வளர்க்க மிகவும் ஆசையாய் இருக்கிறது என்று நடிகை கீதா கூறியுள்ளார்.

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை :

சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் உள்ள கால்வாய் ஒன்றில் கடந்த 15ம் தேதி ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 மணி நேரத்திலேயே தொப்புல் கொடி கூட அறுக்கப்படாமல் கால்வாயில் வீசி எரியப்பட்டுள்ளது.

குழந்தை மீட்பு

மீட்கப்பட்ட குழந்தை

காலை பால் போடுவதற்காக பால்காரர் அப்பகுதிக்கு வந்த வேளையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உற்றுப் பார்த்த அவரின் கண்களுக்கு தென்பட்டது பச்சிளம் குழந்தை. பதறிப் போனவர் உடனே அனைவரையும் கூச்சலிட்டு அழைத்துள்ளார்.

சென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

பின்னர் அங்கு கூட்டம் கூடி நிற்க, கால்வாய் உள்ளே இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க அனைவரும் தயங்கி நின்றனர். அப்போது சிறிதும் தயக்கமின்றி அக்குழந்தையை வெளியே மீட்டெடுத்தார் கீதா.

குழந்தை வளர்க்க ஆசைப்படும் சின்னத்திரை நடிகை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற “கார்த்திகை பெண்கள்” மற்றும் “நம்ம குடும்பம்” ஆகிய சீரியல்களில் நடித்துள்ளவர் தான் கீதா. இவர் தான் அக்குழந்தையை கால்வாயில் இருந்து மீட்டு சுதந்திரம் என்று பெயர் சூட்டினார்.

தற்போது அவரின் மகளுக்கு திருமணமாகி சில வருடங்கள் கழிந்தும் குழந்தை இல்லாததால், தானே அந்த குழந்தையை எடுத்து வளர்க்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close