scorecardresearch

’வாழ்க்கை யாருக்காகவும் சாவதற்கு அல்ல’ : ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தமாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் உங்களுடைய சிறந்த நண்பராக எப்போதும் இருப்பேன்.

Aishwarya Rajesh advice for fan
Aishwarya Rajesh advice for fan

Aishwarya Rajesh: கொடுக்கும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடிப்பதில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கை தேர்ந்தவர். சமூக வலைதளங்களில் தனது படங்களை பதிவிடும் போது, ரசிகர்களின் அளவிட முடியாத அன்பை கமெண்டுகளில் பெறுவார்.

Tamil News Today Live: உலகளவில் 80 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

Aishwarya Rajesh advice for fan
ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்

அந்த வகையில் சமீபத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.
அதைப் பார்த்த ரசிகை ஒருவர், “அக்கா நான் உங்களுடைய தீவிர ரசிகை. உங்களுக்காக நான் உயிரையும் விடுவேன். உங்களுடைய நடிப்பு மிகவும் பிடிக்கும்” என அதில் கமெண்ட் செய்திருந்தார். அதனைப் பார்த்த ஐஸ்வர்யா, பதறிப்போய் அந்த ரசிகைக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத்தான் எதிர்பார்த்தோம்… வாட்ஸ் ஆப் புதிய வசதிகள் சோதனையோட்டம்

“நன்றி. ஆனால் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். வாழ்க்கை என்பது யாருக்காகவும் சாவதற்கு அல்ல. இதை யாருக்காகவும் சொல்ல வேண்டாம். உங்களைப் போன்ற ரசிகர் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படியான வார்த்தைகளை பயன்படுத்தமாட்டேன் என்று வாக்குறுதி தந்தால் நான் உங்களுடைய சிறந்த நண்பராக எப்போதும் இருப்பேன்” என்று தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யாவின் இந்த பதில் நெட்டிசன்கள் மனதை வென்றுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Aishwarya rajesh advice for fan who said wants to die for her