பள்ளி விளையாட்டு விழாவில் தனது மகன்கள் பரிசு வென்றது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’3’, ’வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான பயணி என்ற வீடியோ ஆல்பம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படியுங்கள்: ‘விஜயகாந்த் படத்தில் ரேவதி ரோலில் நடிக்க வந்த அழைப்பு; அப்புறம்…’: அனிதா குப்புசாமி சீக்ரெட்ஸ்
தற்போது, விளையாட்டை மையமாக வைத்து லால் சலாம் என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் அவரது தந்தை ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்க உள்ளார்.

திரைபட வேலைகளில் பிசியாக இருந்தாலும், ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா, லிங்கா குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்தநிலையில், தனது மகன்கள் பள்ளி விளையாட்டு விழாவில் ஐஸ்வர்யா தனது தாயார் லதா ரஜினிகாந்த் உடன் கலந்துக் கொண்டார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா” எந்தச் சூரியனாலும் இந்த குழந்தைகளின் விளையாட்டு மீதான தாகத்தை நிறுத்த முடியாது. காலை சூரிய ஒளி பிரகாசத்தில் இவர்கள் ஓடி களைத்தனர். வெயிலில் ஜொலிக்கும் என் மகன்களின் பிரகாசத்தை புன்னகைப்படி கண்டு நின்றுக் கொண்டிருக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil