விஸ்வாசம் திரைப்படம் 7வது வாரத்தில் காலடி படித்துள்ள நிலையில் எவ்வளவு கோடி வசூலை திரட்டியிருக்கிறது என்று தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியிருக்கிறார்.
2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக பேட்ட படத்துடன் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதியது விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். இவர்களின் மகளாக குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், விவேக் மற்றும் கோவை சரளா உட்பட ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தது.
டி. இமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் ஆனது. மேலும், ஜனவரி 10ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது 7வது வாரத்தில் காலடி பதிக்கிறது. படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன போதிலும், இன்றும் ஒரு சில திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் தான்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேட்டி
இந்த ஆண்டின் ஓபனிங்கிலேயே அமோச வசூலை பார்த்த முதல் படமாக விஸ்வாசம் அமைந்திருக்கிறது. இது குறித்து சத்யஜோதி தயாரிப்பாளர் தியாகராஜன் பிரபல பத்திரைக்கைக்கு அளித்த பேட்டியில், “இந்தப் படம்தான் எனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்தது. இத்திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி. இதற்கான பாராட்டு அஜித், இயக்குநர் சிவா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் செல்ல வேண்டும்.
இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும். எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது.
‘விஸ்வாசம்’ படத்துக்கு கடும் போட்டி நிலவிய போதும் மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. அஜித்தை எப்போதும் ஓப்பனிங் கிங் என்றுதான் அழைக்கிறோம். அவருக்கும் ரசிகர்கள் ஏராளம்.” என்றார்.
அமேசான் பிரைம்-ல் விஸ்வாசம்... செம்ம காண்டில் இருக்கும் தல ரசிகர்கள்
அவரின் இந்த பேட்டை பார்த்ததும் அஜித் ரசிகர்கள் அனைவரும் இரக்கை கட்டி வானத்தில் பறக்கிறார்கள். பாடலில் வருவது போலவே இன்று தியேட்டர்களை விட்டு நீங்காமல் வசூலில் அடிச்சு தூக்கி வருகிறது விஸ்வாசம்.