கோடி கோடியாக சம்பாதித்தாலும் தல அஜித்தின் மனைவி ஷாலினி இதை தான் விரும்புகிறார்

கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினி வைத்திருக்கும் செல்போன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி முதல் விஸ்வாசம் வரை அஜித் நடித்த படங்களில் பெரும்பாலான படங்கள் பல நாட்கள் ஓடி வசுல்லை அள்ளிக் குவித்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் 4 பேர் தான். ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித்.

சாதாரண செல்போன் வைத்திருக்கும் அஜித் மனைவி ஷாலினி

இவர்கள் படம் என்றாலே ரிலீசுக்கு பின்னர் தொடர்ந்து 10 நாட்களாவது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ் ஃபுல் தான். இவ்வாறு 90க்கள் முதல் இன்று வரை கொடிக்கட்டி பறக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். அதே போல் தான் நடிகைகளில் முன்னணி இடத்தில் இருந்தவர் ஷாலினி.

கண்ணான கண்ணே பாடலில் வெளிவராத 2வது சரணத்தின் வரிகள் இது தான்

அஜித்தும் ஷாலினியும் இணைந்து நடித்த முதல் படம் தான் அமர்க்கலம். இப்படம் 1999ல் வெளியானது. இப்படத்தில் நடித்திருந்தபோதே இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2000 ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

ajith wife shalini, அஜித்தின் மனைவி ஷாலினி

எவ்வளவு கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலும், எளிமையையே விரும்பும் நடிகர் அஜித். அவரது மனைவி ஷாலினியும் அப்படித்தான். ஆனால் உலகமே ஸ்மார்ட்போன் பின்னர் இருக்கும் இந்த காலத்தில், வெறும் 3500 ரூபாய் செல்போனை பயன்படுத்தும் ஷாலினியை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் தனது மகனுடன் நிற்கும் ஷாலினியின் கையில், நோக்கியா 3310 வைத்திருந்தார். அந்த செல்போனின் விலை வெறும் ரூ. 3,200 தான். இதை பார்த்த பலரும் அவர்களின் எளிமையான வாழ்க்கையை பாராட்டி வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close