/tamil-ie/media/media_files/uploads/2022/09/Ajith-Bike.jpg)
இன்சூரன்ஸ் காலாவதியான பைக்கில் நடிகர் அஜித்குமார் சுற்றுலா பயணம் செய்து வருவதாக, இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார் பைக் பிரியர் மற்றும் ரேசர் என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவர் ட்ராவல் பிரியரும் கூட. அடிக்கடி வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அவ்வாறு சுற்றுலா செல்லும்போது பெரும்பாலும் பைக்கிலே பயணம் செய்கிறார். இது தொடர்பான புகைபடங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகி வரும்.
இதையும் படியுங்கள்: ஹாலிவுட் படம் போல் வித்தியாசமாக இருக்கும்… கேப்டன் குறித்து நடிகர் ஆர்யா
அந்தவகையில் நடிகர் அஜித் தற்போது, இமயமலை பகுதிகளில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த பயணத்தில் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து சென்றுள்ளார். அஜித் மற்றும் மஞ்சு வாரியர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன.
இதனிடையே அஜித் பயணத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. லடாக் பயணத்தை அஜித் BMW R 1200 என்ற பைக்கில் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களாக வெளியான புகைப்படங்கள் மூலம் அஜித், இந்த பைக்கில் பயணம் செய்வது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், அஜித் பைக்கின் எண்ணும் படங்களில் தெளிவாக தெரிந்தது. இந்த பைக் எண்ணை வைத்து ஆராயந்த இணையவாசிகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த பைக் 2019ல் அஜித் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பைக்கிற்கான இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பைக் இன்சூரன்ஸ் கடந்த 2020 ஆம் ஆண்டே காலாவதியாகி விட்டதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் அஜித் பயணம் செய்து வருகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
BREAKING : #AjithKumar BIKE insurance is expired since Nov 2020.
— KavinKumar (@Kavin122198) August 29, 2022
Ajith Kumar still use a non insured vehicule in 2022 for his bike trip. pic.twitter.com/zQIPirLe7S
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.